“அம்மா, தாத்தா பாட்டி எங்க? காலைலேர்ந்து பார்க்க முடியல.” என்றபடி வெளியே எட்டிப் பார்த்தாள் வினிதா.

துணிகளை மடித்துக் கொண்டிருந்த அவள் அம்மா, “இன்னிக்கு நம்ம தோட்டத்தில உருளைக்கிழங்கு நிறைய விளைஞ்சிருக்கு வினிதா.. அதான் அத எடுக்க போயிருக்காங்க. இதோ வந்துட்டாங்க பாருங்க” என கூற அனைவரும் வாசல் பக்கம் வந்தனர்.

“பாட்டி எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல. நாங்களும் கிழங்குத் தோட்டத்தைப்  பாத்திருப்போமே!” என்றபடி ராமு தாத்தாவின் கையிலிருந்த பையை வாங்கினான்.

“பரவாயில்ல கண்ணு, அடுத்த தடவை அழைச்சிட்டுப் போறோம். இன்னிக்கு நம்ம தோட்டத்துக் கிழங்குல உங்களுக்குப் பிடிச்ச உருளைக்கிழங்கு கட்லட் செய்யலாமா..” என்றார்.

  ராமுவும் வினிதாவும் ஆர்வத்துடன், “ம்ம்ம்!  சரி தாத்தா! செய்யலாம்” எனத் தயாராகினர்.

 “தாத்தா! முதலில்  என்ன பண்ணப் போறோம்” என்ற வினிதாவிடம் தாத்தா சொன்னார், “இதோ இந்த கிழங்குகளை வேகவைக்கப் போறோம்” என்றார்.

பாட்டி ராமுவிடம், “அப்புறம் பெரிய வெங்காயம் ஒன்று பொடிப்பொடியா நறுக்கி வச்சிக்கனும். அதுகூட துருவுன கேரட் ஒன்னு, ரெண்டு பீன்ஸ், குடைமிளகாய் இது எல்லாத்தையும் பொடியா நறுக்கி வச்சிக்கனும்” என்றார்.

“அதுக்கப்புறம் அடுப்புல வாணலிய வச்சி எண்ணெய் 4 ஸ்பூன் போட்டு, சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் பொடியாக கட்பண்ணி சேத்துக்கனும். அதுகூட நறுக்கி வச்ச காய் எல்லாத்தையும் சேர்ந்து வதக்கிக்கனும், பாதி வதக்குனதும் அதுகூட உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்தக் கிளறனும்.. கடைசியாக வேகவச்ச கிழங்க தோல் எடுத்துட்டு, மசிச்சு, வதங்குன காய்கூட சேர்த்து, கொத்தமல்லி தூவி பிரட்டி விடனும்” என்று ஒவ்வொன்றாகத் கூறியபடியே தாத்தா வேலையில் இறங்கினார்.

 “சூடு ஆறுனதும் அதைப் பந்து மாதிரி உருட்டி எடுத்துட்டு, உள்ளங்கையில வச்சு தட்டி, அதை லேசா அரிசி மாவுல பிரட்டி எடுத்து, தோசை கல்லுல எண்ணெய் ஊத்தி ரெண்டு பக்கமும் நல்லா சிகப்பாகற அளவுக்கு பொறிச்சி எடுத்தா , இதோ உங்களுக்குப் பிடிச்ச உருளைக்கிழங்கு கட்லட் ரெடி” என்று பாட்டி தன் பங்கு வேலையைச் செய்தபடி கூறினார்.

Cutlet

பொறித்து தட்டில் வந்த கட்லட்டை இருவரும் எடுத்துக் கடிக்க ஆரம்பிக்க, அதைப் பார்த்த பாட்டி கேட்டார் “என்ன வினிதா, ராமு.. உங்க ரெண்டு பேருக்கும் கட்லட் பிடிச்சுருக்கா?”

“ம்ம்ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டி.” என்று உணவை மென்ற படி ராமு கூற, வினிதா,  “நாளைக்கு ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸா இத பண்ணி தர்றீங்களா தாத்தா!” என்றாள்.

 “கண்டிப்பா டா கண்ணா… இப்போ பொறுமையா சாப்பிடுங்க”

“ம்ம்.. சரி”, என்றபடி இருவரும் தங்கள் சிற்றுண்டியை சாப்பிடுவதில் முழுமூச்சாக இறங்கினர்.

என்ன சிட்டுகளே! இந்த சிற்றுண்டியை உங்க வீட்டிலும் செய்து பார்த்து  தாத்தா, பாட்டியிடம் எப்பிடியிருக்கு என்று கமென்ட்டில் சொல்றீங்களா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments