வேகவேகமாக வந்து செருப்பை வெளியே கழட்டி போட்டு உள்ளே வந்த பாட்டி அகிலைப் பார்த்து கேட்டார், “அகில்.. அந்த செம்புல கொஞ்சம் தண்ணி கொண்டு வாப்பா! வெயில்ல போய் வந்தது ரொம்ப தாகமாக இருக்கு..”

களைத்துப் போய் கடையில் வாங்கிய படைகளோடு சோபாவில் அமர்ந்த பாட்டியைப் பார்த்த அகில், “ஓகே பாட்டி.. வர்றேன்..” என்று சமையலறைக்கு ஓடினான்.

அவன் கொண்டு வந்து கொடுத்த டம்ளரை வாங்கிக் குடித்தவர், “அட.. என்னடா இது..” என்று குனிந்து உள்ளே பார்த்தார்.

“நல்லா இருக்கா பாட்டி?”

“சூப்பரா இருக்கு!”

“ஹேய்.. சூப்பர்‌.. நானும் இனியாவும் சேர்ந்துதான் இதை செஞ்சோம்.”

“இது பேரு ‘ஜல்ஜீரா’. நான்தான் இதற்கு ரெசிபி கொடுத்தேன்” என்றபடி தனக்கும் ஒரு டம்ளரோடு வந்து சோஃபாவில் அமர்ந்தார் தாத்தா.

“உங்க ரெண்டு பேருக்கும்?”  என்று எழப் போன பாட்டியைக் கையைப்பிடித்து அமர வைத்து இனியா சொன்னாள், “நாங்க ஏற்கனவே ரெண்டு டம்ளர் குடிச்சிட்டோம் பாட்டி” என்றாள்.

“சரி.. இதை எப்படி செஞ்சீங்க?”

“நான் சொல்றேன்‌ பாட்டி.. கொஞ்சம் புதினா இலை, கொத்தமல்லி இலையை தண்ணீர் ஊற்றி மிக்ஸில அரைச்சிக்கனும். ஒரு பாத்திரத்துல ஐஸ்கட்டி போடனும். அதில் கொஞ்சம் இஞ்சி துருவி போடனும்.” என்ற அகிலை இடையிட்டு, “மிச்சத்தை நான் சொல்றேன் பாட்டி” என்று   இனியா ஆரம்பித்தாள். “நாம் அரைச்சி வச்சதை பாத்திரத்தில் ஊத்தனும். நிறைய தண்ணி ஊத்தனும். கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள், அரை எலுமிச்சை பழம் பிழிந்த சாறு இதையெல்லாம் பாத்திரத்தில் சேர்க்கனும். ஜல்ஜீரா ரெடி!”

jaljeera

“செம ஈசியா இருக்கே! ஆமா ஜல்ஜீரா னா என்ன?”

“ஜல் னா தண்ணீர் பாட்டி. ஜீரா னா சீரகம்.” அகிலும் இனியாவும் ஒன்றாய் சொல்ல, சிரித்த தாத்தாவும் பாட்டியும், “வாலுபசங்க..” என்றபடி சிரித்தனர்.

உங்க வீட்லயும் ஜல்ஜீரா செஞ்சி பாருங்க  குட்டீஸ்.. குடிச்சி பாருங்க.. எப்படி இருக்குன்னு எங்களுக்கு சொல்லுங்க.. ஓகேவா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments