ஹாய் பூஞ்சிட்டுகளே வணக்கம்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. எல்லாருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

 மழை நாள் ஆரம்பித்து விட்டது, எல்லாரும் வீட்லயே இருங்க வெளில தண்ணில விளையாடதீங்க செல்லங்களே.. தண்ணிய சூடு பண்ணி குடிக்கனும்..

இந்த மாதிரி நேரத்தில நல்லா காரமா இலேசான பண்டங்கள் எடுத்துக்க ரொம்ப பிடிக்கும் இல்லையா அப்படியான ஒரு உணவுதான் புளி அவல். அது எப்படி செய்யலாம்னு இன்னிக்கு பார்க்கலாம்.

ஒரு டம்ளர் கெட்டி அவல் எடுத்துக்கங்க.

அதே அளவு டம்ளர் ரெண்டு டம்ளர் தண்ணீர்ல பெரிய நெல்லிக்காய் அளவு புளியை 15 நிமிடம் ஊர வைங்க.

புளி ஊருனதும் அத நல்லா கரைச்சி வடிகட்டி நாம்ம எடுத்து வச்சிருக்க அவல்ல சேர்த்து 20 நிமிஷம் ஊற வைக்கனும். அதுல இருக்குற தண்ணி எல்லாம் நல்லா அவல் உறிஞ்சினதுக்கு அப்பறம் அந்த அவல்ல ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு,  பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்துக்கனும். கிளறி விடறதுக்கு முன்னாடி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய் 1, காய்ந்த மிளகாய் 2,  கருவேப்பிலை தாளிச்சி அத அவல்ல போட்டு கிளறி விடனும்.

இப்போ நமக்கு சுவையான ஆரோக்கியமான புளி அவல் தயாராயிட்டு.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments