எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலும் பரவலாக இருக்கும் ஒரு பொருள் தோசை மாவு. அனைத்து கடைகளிலும் கூட தோசை மாவு பாக்கெட்டில் கிடைக்கிறது. இந்த தோசையை கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு சாப்பிடலாமா?

தேவையான பொருட்கள்:

 • சற்று கெட்டியான தோசை மாவு – ஒரு கப்
 • நறுக்கிய வெங்காயம்
 • சாஸ் அல்லது சட்னி
 • கொத்தமல்லி
 • எண்ணெய்
 • சீவிய சீஸ் – அரை கப்
Cheese dosa

செய்முறை:

 • வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
 • அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மிதமாக சூடேற்றிக் கொள்ளவும்
 • தோசை மாவை எப்போதும் தோசை சுடுவது போல வட்டமாக ஊற்றிக் கொள்ளவும்
 • தோசை பாதி வெந்தவுடன் அதன் மீது வெங்காயத்தை பரப்பி முழுவதற்கும் சாஸ் -உம் தடவிக் கொள்ளவும்
 • தோசையை சுற்றி எண்ணெய் விட்டு ஒரு மூடியால் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
 • வெங்காயம் சிறிது வெந்தவுடன் திறக்கவும்
 • கொத்தமல்லியை தூவி மொருமொருப்பாகும் வரை விடவும்
 • இப்போது சீவிய சீஸ் எடுத்து தோசை மேல் பரப்பவும்
 • சீஸ் விரைவாக உருகும். அடுப்பை அணைத்து விடவும்.
 • தோசையை மடித்து பரிமாறவும்

சீஸ் தோசை தயார். வீட்டுல செஞ்சு பாத்து எப்படி இருந்தது என்று கமெண்ட் செய்யுங்க.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments