ஹாய் ஃப்ரெண்ட்ஸ்  தீபாவளிய எல்லாரும் நல்லா கொண்டாடுனீங்களா?  இப்ப மழை வேற அதிகமா இருக்கு கொஞ்சம் கவனமா இருங்க.. அதிகமா வெளியே எல்லாம் போகாதீங்க ஃப்ரெண்ட்ஸ்.

           நேத்திக்கு தாத்தா மழை நேரத்துல தொண்டைக்கு இதமா இருக்கும் அப்படீன்னு சொல்லி , இஞ்சி சாறு செஞ்சு குடுத்தாங்க. அத எப்டி செய்யறதுனு இப்ப நான் உங்களுக்கு சொல்றேன் நீங்களும் செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லா இருந்தது.

    ஒரு பெரிய இஞ்சியைத் தோல் சீவி கழுவி எடுத்துக்கோங்க .. அத துண்டு துண்டாக நறுக்கி சின்ன ஜார்ல போட்டு அதுகூட ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நல்லா அரைச்சுக்கோங்க.

பின்பு அதை நன்கு வடிகட்டணும்.. தேவைப்பட்டால் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கலாம். அதனுடன் அரை மூடி எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்துக்கங்க.

injisaru

 வடிகட்டுன சாறு கூட சர்க்கரை டேஸ்ட் பிடிச்சா தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கோங்க. இல்லனா தேன், நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம். உடம்புக்கு ரொம்ப நல்லது..

இஞ்சிச் சாறு குடிச்சுட்டு எப்படி இருந்ததுனு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments