savithri 1

குழந்தைகளே!?  இவர் யார் தெரியுமா?,

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினம் என்பது,  உங்கள் எல்லாருக்கும் தெரிந்த செய்தி..

இரண்டாவது குடியரசுத் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக அவரோட பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். 

இந்த நாளில் இன்னொரு முக்கியமான நபரைப் பற்றிக் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.   

அவர் பெயர் சாவித்திரிபாய் புலே. அவர் தான், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.  முக்கியமான சமூகப் போராளியும் கூட. 

குழந்தையாயிருக்கும் போதே, திருமணம் செய்வது‌ அப்போது வழக்கத்தில் இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1831 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு ஒன்பது வயதிலேயே, ஜோதிராவ் புலே என்பவரைத் திருமணம் செய்து வைத்தார்கள்.  இவரது கணவரும் ஒரு சமூகப் போராளி. 

அந்தக் காலத்தில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கல்வி கற்க உரிமை கிடையாது. அதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து, அவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி அதை நடத்தினார்கள்.  

1848 ஆம் ஆண்டு, பெண் குழந்தைகளுக்காக இந்தியாவிலேயே முதல்முறையாகப் புனேவில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அங்குச் சாவித்திரிபாய், ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பாடம் நடத்தினார்.  அதனால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்கிற சிறப்பு இவருக்குக் கிடைத்தது.   

பெண்களுக்குக் கல்வி போதித்தார் என்பதற்காக இவர் பட்ட கஷ்டம், கொஞ்சம் நஞ்சமல்ல. இவர் பள்ளிக்குப் போன போது இவர் மேல் சாணியையும், சேற்றையும் வாரி வீசினார்களாம்.  அதனால் தினமும் பள்ளிக்கூடம் போகும்போது, இரண்டு புடைவை எடுத்துக் கொண்டு போவாராம்.  அங்குப் போய், உடையை மாற்றிக் கொண்டு, பாடம் நடத்துவாராம்.  

தம் வாழ்நாள் முழுக்க விதவைத் திருமணம், சாதி ஒழிப்பு, பெண் சிசு கொலைக்கு எதிர்ப்பு ஆகிய சமூக சீர்திருத்த காரணங்களுக்காகத்  தொடர்ந்து போராடியிருக்கிறார்.  முடிதிருத்துபவர்களை ஒன்று சேர்த்து  விதவைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்.

இவர் ஒரு கவிஞரும் கூட. ‘கவிதை மலர்’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை, வெளியிட்டிருக்கிறார்.. 

1897 ஆம் ஆண்டு பிளேக் நோய் பரவிய போது இவர் தம் மகனுடன் சேர்ந்து ஒரு மருத்துவமனையை நிறுவினார்.  நோயால் பாதிக்கப் பட்டவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை பெற உதவினார். அந்தத் தன்னலமில்லாப் பணியில், இவருக்கும் நோய்த் தொற்று, ஏற்பட்டு மரணமடைந்தார்.

2017 ஆம் ஆண்டு இவர் பிறந்த நாளான ஜனவரி 3 ஆம் தேதி, ‘கூகுள் டூல்’ வெளியிட்டுச் சிறப்பு செய்தது கூகுள் நிறுவனம்.

savithri 2

இவருடைய சேவையை நினைவு கூறும் விதமாக, இவரது பிறந்த நாள், பெண்களின் கல்வி தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments