நிலா நிலா ஓடி வா!
வெள்ளை நிலா ஓடி வா!
பிள்ளை முகம் மலர வா!
பால் அமுது ஊட்ட வா!
நிலா நிலா ஓடி வா!
வெள்ளி நிலா ஓடி வா!
அல்லி மலர் பூக்க வா!
துள்ளி அலை குதிக்க வா!
நிலா நிலா ஓடி வா!
நிலாப் பாட்டி ஓடி வா!
நிலாச் சோறு தின்ன வா!
சுட்ட வடை எடுத்து வா!
நிலா நிலா ஓடி வா!
கல்லா மண்ணா ஆட வா!
கண்ணா மூச்சி பிடிக்க வா!
முகிலைக் கூட கூட்டி வா!
அருமை..தொடர வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
அருமை…
தங்கள் வருகைக்கும் அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி.