பல்லாங்குழி 3

கிரௌண்டில் பாதிப் பேர் குலை குலையா முந்திரிக்காவும், பாதிப் பேர் பச்சைக் குதிரையும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

மெல்ல நடந்து அபிநயா அபிநவுடன் கிரௌண்டிற்க்கு வந்த ஸ்ருதி, அனைவரையும் பார்த்து, “எங்க அக்காவுக்கு காலில் புண் இருக்கு,  அவங்களால ஓடி விளையாட முடியாது,  அதனால உட்காந்து தான் விளையாடப் போறோம்” என்றாள்.

pallanguzhi 1

“எப்படிப் புண்ணாச்சு அபி” என்றாள் ஆதிரா. “கதவுல இடிச்சுக்கிட்டேன்” என்று அபிநயா சொல்லவும், பார்த்து போகக் கூடாதா” என்றாள் இனியா. “இனி கவனமா இருக்கேன்” என்று நண்பர்களைப் பார்த்து சொன்னவள், அங்கிருந்த மண் தரையில் அமர்ந்து கொண்டாள்.

அவள் அருகில் ஸ்ருதியும் போய் உட்கார, மற்ற நண்பர்களும் உட்கார்ந்தனர். “இன்னைக்கு என்ன விளையாடலாம் ஸ்ருதி” என்றான் சஞ்சய்.

“இன்னைக்கு நாம பல்லாங்குழி விளையாடுவோம் அண்ணா, இது உட்காந்துகிட்டே விளையாடலாம் இரண்டு பேர் தான் விளையாட முடியும்” என்றாள். “எப்படின்னு சொல்லு” என்று இனியா கேட்க,  “இதுக்கு எழுபது கல் வேண்டுமே” என்றாள் ஸ்ருதி.

“அதோ அந்த கருங்கல்லை எடுத்துக்கலாமா?” என்று கேட்டாள் அபிநயா. அங்கே சின்னச்சின்ன ஜல்லிக் கல்லாக கிடந்தது. திரும்பி பார்த்த ஸ்ருதி, “அதே போதும் அக்கா” என்றாள்.

அபிநவ் போய் கல்லெடுத்து வர, ஸ்ருதி உட்கார்ந்திருந்த இடத்தில் சின்ன சின்னதாக ஏழு குழிகளை ஒரு பக்கமும், அதே நேர் மறுபக்கம் ஏழு குழிகளையும் தோண்டினாள். மற்றவர்களும் உதவ விரைவாக குழி தோண்டியிருந்தார்கள்.

“அக்கா இது அழகழகாக கடைகளில் விற்கிறது, எனக்கு எங்க அப்பா மரத்தில் செய்ததை வாங்கி தந்தார், நீங்களும் வாங்கி வைத்துக் கொண்டால் வீட்டிற்குள் போறடிக்கும் போது விளையாடலாம்” என்றாள் ஸ்ருதி.

அபிநவ் கல் கொண்டு வந்திருக்க, ஒவ்வொரு குழிக்கும் ஐந்து கல் வீதம், எல்லா குழிக்குள்ளும் போட்டாள். இதை எல்லாரும் கவனமாக பார்க்க, “யார் வரீங்க முதலில்” என்றாள். ஆதிரா, “நான் வரேன்” என்று அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள்.

pallanguzhi2

“அக்கா உங்க சைடு இருக்கும் ஏழு குழியும் உங்களது, என் பக்கத்தில் இருப்பது என்னுடைய குழி” என்றவள்,  “அக்கா இப்படி ஒரு குழியிலிருந்து கல்லை எடுத்து நமக்கு வலது பக்கமோ இல்லை இடது பக்கமோ ஆரம்பிக்கனும், முதலில் விளையாடுபவர்கள் எந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறாங்களோ, அதே பக்கத்தில் தான் எதிரில் இருப்பவர்களும் ஆரம்பிக்க வேண்டும் பாருங்க” என்று அவளுக்கு இடதுபுறம் ஒரு குழிக்கு ஒரு கல் வீதம் போட்டுக் கொண்டு வந்தாள்.

கல் முடிந்ததும் அதற்கு அடுத்த குழியிலிருந்த கல்லை எடுத்து ஒவ்வொரு குழியாக போட்டு வந்தாள். இப்படியே இரண்டு மூன்று சுற்று போனதும், முதலில் இருந்த குழியில் நான்கு கல் சேர்ந்திருந்தது.

அதைக் காட்டி, “இதோ இப்படி நான்கு கல் என் பக்கம் சேர்ந்தால் நான் எடுத்துக் கொள்வேன். உங்க பக்கம் சேர்ந்தால் நீங்க எடுத்துக் கொள்ள வேண்டும், அடுத்த சுற்று வரும் வரை பார்க்காமல் விட்டு விட்டால், அதை எடுக்க எதிரில் இருப்பவர் விடக்கூடாது, இதே போல் விளையாடும் போது, கல் போட்டு முடித்து அடுத்த குழியில் கல் இல்லை என்றால், அதற்கு அடுத்த குழியில் இருக்கும் கல்லை எடுத்து, நாம் வைத்துக் கொள்ள வேண்டும்”  என்று சொல்லி செய்தும் காண்பித்தாள்.

“இப்படியே எல்லாக் கல்லையும் எடுக்கும் வரை விளையாட வேண்டும்” என்று இரண்டு பேரும் விளையாடினார்கள். விளையாடி முடித்ததும், “அக்கா உங்ககிட்ட இருக்கும் கல்லை வைத்து, உங்க குழிக்கு ஐந்து கல்லாக போடுங்க” என்று சொன்னவள், அவள் குழியை நிரப்பினாள்.

அவளிடம் அதிகமாக கல் இருந்தது. “ஸ்ருதி மூன்று குழிக்கு கல் இல்லை” என்றாள் ஆதிரா. “ஆமாம் அக்கா அந்த கல் என்னிடம் உள்ளது, இப்ப நாம விளையாடும் போது கவனமாக அந்த மூன்று குழிக்கும் கல் போடக் கூடாது, மற்ற குழிகளில் அதே மாதிரி போட்டு விளையாட வேண்டும்” என்று அந்த ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

அந்த ரவுண்ட் முடியும் போது மேலும் ஒரு குழிக்கு கல் இல்லாமல் போனது ஆதிராவுக்கு. “இப்படி தான் அக்கா விளையாடனும்,  உங்க குழிக்கு முழுவதும் கல் இல்லாத வரை  விளையாடனும், உங்களிடம் கல் இல்லை என்றாள் நான் ஜெயித்து விட்டேன்” என்று விளையாட்டை முழுவதும் விளையாடிக் காட்டினாள்.

pallanguzhi3

அதில் ஸ்ருதி ஜெயித்திருந்தாள். “நான் விளையாடிப் பார்க்கறேன்” என்று இனியா வர, “எனக்கும் ஆசையாக இருக்கு நான் வறேன்” என்றாள் அபிநயா.

இனியாவும் அபிநயாவும் விளையாட சுற்றிலும் எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “கவனமா விளையாடனும் எந்த குழியில் இருந்து எடுத்தால் எத்தனை குழிக்கு வரும், நமக்கு எத்தனை கல் வரும் என்று கணக்கு போட்டு, அதற்கு தகுந்த மாதிரி குழியிலிருந்து கல்லை எடுங்க” என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments