சிதறல் ஓவியம்

வண்ணம் தீட்ட தூரிகைகள் (paint brush) பயன்படுத்தி இருப்போம். நாம் பல் துலக்க பயன்படுத்தும் தூரிகைகள் (tooth brush) கொண்டு கூட வண்ணம் தீட்டலாம். இப்போ நாம் வண்ணம் தீட்ட போறதில்லை. வண்ணங்களை தெளிக்க போறோம். அதை ஆங்கிலத்தில் splatter painting என்று சொல்லுவாங்க. பற்தூரிகை கொண்டு எப்படி இந்த படத்தை நாம் தீட்ட போகிறோம் என்று பார்க்கலாமா ?

தேவையான பொருட்கள் :

நகல் எடுக்க உதவும் உள்வெட்டு தகடு / Stencil

விருப்பமான படம்

வாட்டர் கலர்

பற்தூரிகை (பழையது / பயன்படுத்தாதது)

வழிமுறை :

முதலில், நகல் எடுக்க உதவும் உள்வெட்டு தகடு, அதாவது stencil கொண்டு வண்ணம்  தீட்டுவோமா?

உங்கள் stencil ஐ, பேப்பரின் மீது வைத்து, அது நகராமல் நான்கு புறமும், ஒட்டும் டேப் கொண்டு ஒட்டவும். அல்லது, ஏதேனும் கனமான பொருள்களை வைத்து, நகராமல் பார்த்துக் கொள்ளவும்.

இப்போது, உங்கள் பல் துலக்கும் தூரிகையில், வண்ணங்களை தொட்டு, தூரிகையால் தெளிக்கவும். தெளித்த பின், stencil ஐ எடுக்க, அழகான படம் கிடைக்கும்.

இதே போல், முழுதாக இருக்கும் படத்தினை வைத்து, வண்ணம் தெளித்து, ஓவியங்களை உருவாக்கலாம்.

குழந்தைகளே, இந்த வண்ணம் தெளிக்கும் முறையினை முயற்சித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *