கொண்டைக்குருவி

குழந்தைகளே!

பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்.

இம்மாதம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர் கொண்டைக்குருவி – (RED VENTED BUL BUL)

Source: Wikipedia

இதற்குச் சின்னான் என்ற பெயரும் உண்டு. தலை கறுப்பாகவும், வாலுக்கடியில் சிவப்பாகவும் இருக்கும்.  கொண்டை சற்று உயர்ந்து காணப்படும்.

வாலுக்கடியில் இருக்கும் சிவப்பு தான், இதன் முக்கிய அடையாளம். உடலின் நிறம் கரும்பழுப்பாகவும், செதில் செதிலாகவும் தோன்றும். இதன் கொண்டையையும், வாலுக்கடியில் உள்ள சிவப்பையும் கொண்டு, இதனை எளிதில் அடையாளம் காணலாம்.

புழு, பூச்சி, பழம், பூக்களின் இதழ், தேன் ஆகியவை, இதன் முக்கிய உணவு. சிறு சிறு குச்சிகளைக் கொண்டு, கிண்ண வடிவில் கூடு கட்டும். 

ஜுன் முதன் செப்டம்பர் வரை இதன் இனப்பெருக்கக் காலம், ஆண், பெண் இரண்டும் சேர்ந்து, குஞ்சுக்கு இரையூட்டும். குஞ்சுகளின் முக்கிய உணவு புழுக்கள்.

இதனை நீங்கள் பார்த்து அடையாளம் கண்டு கொண்டால், மறக்காமல் எங்களுக்கு எழுதுங்கள்.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:- feedback@poonchittu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *