குழந்தைகளே! எல்லாரும் எப்படி இருக்கீங்க..?
நாங்க இங்க நல்லா இருக்கோம்! லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து ஒரு மாசமாச்சு.! கிட்டத்தட்ட மூணு வாரங்கள் முன்னாடி ஒரு பெரிய காட்டுத்தீ காலிஃபோர்னியால ஏற்பட்டுச்சு.. நியூஸ்’ல பாத்திருப்பீங்களே..?! காலை வானம் கூட அடர்ந்த புகை மண்டலத்தோட மஞ்சளாக..!
எல்லாமே காட்டுத்தீயோட வேல தான்!
ஏறக்குறைய 20000 ஹெக்டர் அளவிலான மரங்கள் எரிஞ்சு போச்சுதாம்! கலிபோர்னியா’ல காட்டுத்தீயும் நிலநடுக்கங்களும் ரொம்ப சாதாரணம். ஆனா இந்தக் காட்டுத்தீ இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரிய சேதாரத்த உருவாக்கியிருக்காம். காடுகள் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகள் மட்டுமில்லாம அருகிலிருந்த வீடுகள், இணைப்பு சாலைகள்’ன்னு சுற்று வட்டாரத்துல ஏகப்பட்ட இடங்கள் தீயில கருகிப்போச்சுதாம்! இது பத்தாதுன்னு சுவாசிக்கிற காத்தோட தரம் அநியாயத்துக்கு மோசமாகிடுச்சு! நம்ம ஊருல கொரோனாக்கு முகக் கவசம் போடுறது மாதிரி இங்க சுவாசிக்கிறதுக்காகவே கவசம் போடுற மாதிரி ஒரு இக்கட்டான நிலைமை வந்துடுச்சு! நாம குடிக்கிற தண்ணீர் எவ்வளவு சுத்தமா இருக்கனமோ அதே மாதிரி சுவாசிக்கிற காத்து சுத்தமா சுகாதாரமானதா இருக்கணுமாம். இல்லன்ன நுரையீரல்ல நிறைய பிரச்சினைகள் வந்துடுமாம்! குறிப்பா வீட்டுல இருக்க குழந்தைகளும் வயதான தாத்தா பாட்டிகளும் ரொம்ப சிரமமா இருக்குமாம்! அதனால இங்குள்ள அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகள்ல இருக்க வீடுகள்’ல கட்டாயமா காற்றை சுத்தீகரிக்கிற கருவிய பயண்படுத்திக்க சொல்லி அறிவுருத்தியிருக்காங்க!
இவ்வளவு சங்கடத்துக்கும் சம்பவத்துக்கும் காரணமான காட்டுத்தீ உருவாக காரணம் மனிதர்களோட அஜாக்கிரதை தான்னு சொன்னா நம்புவீங்களா?!
ஆமா! காட்டுப்பகுதிக்கு சுற்றுலா சென்ற ஒரு குடும்பம் எளிதில் தீ பற்றக்கூடிய ஒரு பொருள அஜாக்கிரதையா பயண்படுத்தியதால ஆரம்பித்தது தான் இந்தப் பெரிய காட்டுத்தீ!!
மனுஷங்களாகிய் நாம செய்யுற யோசிக்காம செய்யுற ஒவ்வொரு விஷயத்துக்கும் இயற்கை எப்படி வெகுண்டு எழுகிறதுன்னு கண் கூடா பாத்துக்கிட்டு இருக்கோம்!
சரி சுட்டீஸ் இப்படியே பேசிட்டு இருந்தா எனக்கு தொண்டை கட்டிரும்! உங்களுக்கும் போர் அடிக்கும். அதனால ஒரு ஜாலி ரவுண்ட் போயிட்டு வருவோமா?!
குழந்தைகளா வழக்கமான விதிமுறைகள் தான்!
நல்லா என் இறக கட்டிப் பிடிச்சுக்கோங்க! முகக் கவசம் அவசியம்! ஆஹ!!! அப்புறம் இந்தாங்க நான் புதுசா வாங்கின Goggles! வானத்துல வேகமா பறக்கும் போதும் நாம தெளிவா பார்க்க இது உங்களுக்கு ரொம்ப உதவும்?
என்னது அப்போ எனக்கு வேணாமான்னு கேக்கறீங்களா?
ஹாஹா! எனக்கு இயற்கையிலேயே காகிள் போட்ட கண்கள் தான்! போலாம் ரை…..ட்!!!
நாம முதல்ல போகப் போற இடம் க்ரிஃப்பித் பூங்கா!
இது கலிபோர்னியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பூங்கா! கிட்டத்தட்ட 4300 ஏக்கர் பெரிசு! என்னது ரெண்டாவதே 4300 ஏக்கரா! அப்போ முதல் இடத்தில இருக்கிறது?! அப்படித்தானே கேக்கறீங்க!
முதல் இடத்தில இருக்கிற பெரிய பூங்கா மிஷன் ட்ரெயில்ஸ் பூங்கா- இது சான் டியாகோ நகரத்தில் இருக்கு. அங்க இப்போ காட்டுத்தீயால சுத்தமா பறக்க முடியாத நிலைமை! அதனால தான் இங்க வந்தோம்!
இங்க வந்ததுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு!
அது தான், உலகப்புகழ் பெற்ற
ஹாலிவுட் அறிவிப்பு பலகை!
சரி, இதுக்கு அப்புறம் வருவோம்! முதல்ல ஒரு முறை பூங்காவ சுத்திப் பாக்கலாமா குட்டீஸ்!
இது தான் கிரிஃபித் பூங்கா நுழைவு வாயில்!
உள்ள நுழைஞ்சு நடக்க ஆரம்பிச்சதுமே.. ச்ச ச்ச பறக்க ஆரம்பிச்சதுமே கண்ணுக்கெட்டின தூரம் வரை பச்சை பசேல்ன்னு பட்டாசா இருக்கும்!
நீங்களே பாருங்களேன்!
மனதுக்கும் கண்களுக்கும் எவ்வளவு ரம்மியமா இருக்குல்ல?!
இந்த பூங்கால நிறைய நடைப்பாதைகள் சைக்கிள் ஓட்டும் பாதைகள் இருக்கு. பொதுவா நடைக்குழுக்களாவோ பள்ளிக் குழந்தைகள குட்டி நடைப்பயண நிகழ்வாகவோ கூட்டிட்டு வருவாங்க! பொது மக்கள் குழந்தைகள் பயிற்சி வல்லுனர்கள் உடற்பயிற்சி செய்யன்னு இங்க எப்பவும் ஜே ஜேன்னு நல்ல ஜன ரஞ்சகமா இருக்கும்! அது மட்டுமில்லாம இங்க இருக்கிற கூடங்கள்’ல பிறந்த நாள் விழாக்கள் திருமணம்ன்னு நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும்!
இவ்வளவு இயற்கை அழகான சூழல்ல திறந்த பச்சை புல்வெளில நம்ம நண்பர்களோட பிறந்த நாள் கொண்டாடினா எவ்வளவு அருமையா இருக்கும்ல!
சரி.. அப்படி நினைச்சுட்டே கொஞ்சம் தள்ளி பறந்தோம்ன்னா கிரிஃ்பித் கண்காணிப்பகம்(Griffith Observatory) இருக்கு.
இந்த பார்வையகத்துல 1935ல் வடிவமைக்கப்பட்ட , பூமியின் சுற்றுவட்ட பாதைய கணிக்க உதவும் பூக்கோ தனி ஊசல் ( Foucault Pendulum) காட்சிக்படுத்தப்பட்டுறுக்கு!
அது மட்டுமில்லாம இங்க ஒரு பெரிய கோளரங்கம் இருக்கு. நம்ம கிண்டில இருக்க பிர்லா கோளரங்கம் மாதிரி இங்கயும் பூமி-அண்டம்- வானவியல் பத்தின சிறப்பு படங்கள் குழந்தைகளுக்காக காட்டப்படுது!
அது மட்டுமில்லாம பண்டைய மேற்கத்திய அமெரிக்கர்களின் வரலாற்றை படம்பிடிக்கும் ஆட்ரி அருங்காட்சியகம், ஒரு பழைய உயிரியல் பூங்கான்னு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு.
ஆக மொத்தம் இந்த இடத்த சுத்தி வரதுக்கே சரியா ரெண்டு நாளாகும் போல!
பறந்து பறந்து றெக்க வலிக்குது!
இளைப்பாற ஒரு இடம் வேணுமே?!
அட! அவசரத்துல அண்டால கூட கை போகாதுன்னானாம்!
இளைப்பாற தானே இந்த இடத்துக்கே வந்தோம்! அதுக்கே இடமில்லாம போகுமா என்ன!
அதோ கொஞ்சம் தூரத்துல தெரியுதே!! அங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போமா?
அது என்ன இடம் தானேன்னு யோசிக்கிறீங்க..?!
அது தான் நம்ம
யெஸ்! ஹாலிவுட் அறிவிப்பு பலகை !!
இந்த இடத்த கீழ இருந்தும் சரி மேல இருந்தும் சரி முன்னாடி இருந்தும் சரி இப்படி பின்னாடி இருந்தும் சரி ..
அழகை வர்ணிக்க வார்த்தையில்ல!
சும்மா ஜிலுஜிலுன்னு காத்தடிக்க மேலே வானமும் ஆகாசத்துக்கு கீழே அத்தாம் பெரிய ஊரும்
அடுக்கி வெச்ச சின்னச் சின்னத் தீப்பெட்டிகளாத் தெரியுற தருணம்- இயற்கையோட மேஜிக்கல் டச்!
சரி இந்த இடத்துல இத ஏன் எழுதி வெச்சிறுக்காங்க?!
அது ஒரு ஸ்வாரஸ்யமான குட்டிக்கத!
1920களின் தொடக்கத்துல மக்கள் தொகைல மிகவும் குறைவா இருந
த்தால லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டமைப்பாளர்கள்
இந்த இடத்த இன்னும் மக்கள் கிட்ட கொண்டுப்போய் சேக்கணும்ன்னு ஒரு விளம்பரமா இத
த பலகைய இங்க நிறுவியிருக்காங்க! முதல் முதல்ல HOLLYWOODLANDன்னு இருந்த
பலகை 1940க்கு அப்புறமா HOLLYWOODன்னு மாத்தப்பட்டிருக்கு!
ஒரு சின்ன விளம்பரமே ஒரு ஊரோட அடையாளமா மாறினது பெரிய ஆச்சரியம் இல்லையா குட்டீஸ்!
சரி இன்னிக்கு நல்லா சுத்தியாச்சு! மாஸ்க் போட்ட இடமே முகத்துல வேர்த்துருச்சு! அதனால நெக்ஸ்ட் ஸ்டெப் ரெஸ்ட்!!
நீங்களும் நான் வரதுக்குள்ள ஒரு தூக்கத்தப் போட்டுட்டு வந்துடுங்க!
நான் போயிட்டு வரேன் செல்லங்களா! டாட்டா!