வணக்கம் பூஞ்சிட்டுகளே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ஆன்லைனில் பாடம் படித்து, ஆன்லைனில் பரிட்சை எழுதி, அதற்கு காலாண்டு விடுமுறை கொண்டாடிய முதல் தலைமுறை நீங்கதான். காலரைத் தூக்கி விட்டுக்கோங்க.. இந்த வித்தியாசமான சூழ்நிலையில் உங்களுக்கு உற்றதுணையாய் பூஞ்சிட்டு இருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!

ஆசிரியர் தின ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்லாக்  குட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். பரிசினை தட்டிச் சென்ற சுட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

 இந்த மாத பூஞ்சிட்டு இதழில் உங்களுக்கு மிகவும் பிடித்த, கதைத்தொடர்களுயும், சிறுகதைகளும், அறிவியல் பக்கங்களும் மற்றும் பல சுவாரஸ்யமான பகுதிகளும் நிறைந்திருக்கின்றன. எல்லாவற்றையும் படிச்சிப் பாருங்க.. உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நவம்பர் மாதம் குழந்தைகளுக்கான கொண்டாட்ட மாதம். தீபாவளி!! குழந்தைகள் தினம்!! ரொம்ப சந்தோசமா இருப்பீங்க..  எங்கள் நவம்பர் மாத ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு, பாராட்டுகளையும் பரிசுகளையும் வென்று உங்க சந்தோசத்தை இரட்டிப்பாக்கிங்கோங்க..

உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் அனுப்ப வேண்டிய முகவரி: keechkeech@poonchittu.com.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments