சுட்டி யானை – சிறார் மாத இதழ்
செப்டம்பர் 2020 முதல் வெளியாகும் இந்தச் சிறார் இதழ், யானைகள் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. புத்தகத்துடன் வீட்டில் இருக்கும் மண்ணில் விதைக்கச் சொல்லிக் காய்கறி விதைப் பொட்டலம் ஒன்றும் அனுப்பியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இயற்கையில் ஈடுபாடு ஏற்படுத்திட சிறந்த முன்னெடுப்பு!.
யானைகள் சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழு, இப்பொழுது இந்தக் குட்டியானை புத்தகத்தைத் துவக்கியிருக்கிறார்கள். வளரும் தலைமுறைக்கு, யானை, வனம் மற்றும் இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கம்.
யானையோட மூதாதையரான மெரிதீரியம் விலங்கு பற்றி, ஒரு கட்டுரை பரிணாம வளர்ச்சியை விளக்குகிறது. இதற்குத் தும்பிக்கையே கிடையாது.
யானையைப் பற்றிய குழந்தைப்பாடல், தாவரங்கள் அறிமுகம், வண்ணம் தீட்ட யானை ஓவியம், ஆப்பிரிக்க, ஆசிய யானைக்கிடையேயான வித்தியாசங்கள் கண்டுபிடித்தல், குப்பையில் யானை பொம்மை என முழுக்க முழுக்க யானையை மையப்படுத்திய இதழ். குழந்தைகளுக்குச் சுவாரசியமளிக்கும் இதழ். அனைவரும் வாங்கிக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள்.
தனி இதழ் விலை ரூ30/- மட்டுமே. ஆண்டுச்சந்தா ரூ .350/-
ஆசிரியர் – கற்பகத்தின் செல்வன்
வெளியிடுவோர்:- இயல்வாகை சூழலியல் இயக்கம்
தொடர்புக்கு:- 7, கதித்த மலை சாலை
ஊத்துக்குளி – 638751
திருப்பூர் மாவட்டம்.
தொடர்பு எண் 9500125125/9500125126.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.