மாம்பழமாம் மாம்பழம்
மஞ்சள்நிற மாம்பழம்
தித்திப்பு மாம்பழம்
திகட்டாத மாம்பழம்
செந்தூரா மாம்பழம்
சிவப்புநிற மாம்பழம்
பாதிரி மாம்பழம்
பச்சைநிற மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தோல்தடிச்ச மாம்பழம்
ருமானி மாம்பழம்
உருண்டை வடிவ மாம்பழம்
பங்கனபள்ளி மாம்பழம்
சாறு நெறைஞ்ச மாம்பழம்
பெங்களூரா மாம்பழம்
கிளிமூக்கு மாம்பழம்
நீலம் வகை மாம்பழம்
வண்டு மிகுந்த மாம்பழம்
அல்போன்சா மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
சேர்ந்து நாமும் உண்ணுவோம்
பகிர்ந்து நாமும் பழகுவோம்.