வண்ணம் நிறைந்த பூச்சியை பார்- சுற்றி

வட்ட மடிக்குது உன் போலே – நம்

எண்ணம் பலப்பல இருப்பதுபோல் – பாப்பா

எத்தனை நிறங்க ளதன் மேலே!

வண்டு பறக்கும் அழகைப் பார்-அது

வாழ்க்கைப் பாடம் தருகுது பார்- சும்மா

உண்டு குடித்து உறங்காமல்- நல்ல  

உழைப்பால் மகிழ்வும் பெருகுது பார்!

அரச மரத்தின் கிளைகள் பார் – அதில்

அமர்ந்திருக்கும் கிளிகள் பார்- பூ

அரச மரத்தின் இலைகள் பார் – இதில்

புன்னகை தருகிற ஊதல்  பார்!

குளங்கள் பரந்து கிடப்பதைப் பார் – அங்கே

குன்றுகள் நீண்டு  கிடப்பதைப் பார்-பல

வளங்கள் குவிந்து கிடப்பதைப் பார்-அருகே

வயலின் பசுமை சிரிப்பதைப் பார்!

இத்தனை அழகை வைத்திருக்கும்- அந்த

இயற்கை நமக்குத் தெய்வமடி- நாமும்

பித்தனைப் போலே வாழாமல்- அதைப்

பேணிக் காத்தல் செய்வமடி!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments