மீன்கொத்தி

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!

இம்மாதம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பறவையின் பெயர், மீன்கொத்தி (KINGFISHER).  நீர்நிலைகள், வயல்கள் போன்ற இடங்களைச் சுற்றி வாழும். மீன், தவளை, பூச்சி ஆகியவை, இதன் முக்கிய உணவு. மீனைக் கொத்திப் பிடிக்க ஏதுவாக, அலகு நன்கு தடித்தும், நீண்டும் காணப்படும். 

இவற்றில் சில இரகங்கள் இருந்தாலும், வெண்மார்பு மீன்கொத்தியே (WHITE THROATED KINGFISHER) நாம் அடிக்கடிக் காணக்கூடிய பறவை.  மைனாவை விடச் சற்றுப் பெரியது.  முதுகு நீலமாகவும், தலை காப்பிக்கொட்டை நிறமாகவும், மார்பு வெள்ளையாகவும் இருக்கும். அலகும், கால்களும் சிவந்து காணப்படும். இந்த நீல நிறத்தை வைத்து, இதனை எளிதாய் அடையாளம் காணலாம்.  

ஜனவரி முதல் ஜூலை வரையான காலத்தில், வறண்ட ஓடைகளின் செங்குத்தான திட்டுகளில் வங்கு குடைந்து, உள்ளறை ஏற்படுத்தி 6 முட்டைகள் வரையிட்டு, இனப்பெருக்கம் செய்யும்.

குழந்தைகளே! இப்பறவையை நீங்கள் கண்டால், அது பற்றி எங்களுக்கு எழுதுங்கள். 

முகவரி:- feedback@poonchittu.com 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *