குழந்தைகளா, அழகான விரல் அச்சு ஓவியங்களை உருவாக்கலாமா? இந்த ஓவியம் வரைய, தூரிகைகள் எல்லாம் தேவையில்லை. உங்கள் விரல்களே தூரிகைகள்.
தேவையான பொருட்கள் :
பல நிறத்திலான அக்ரிலிக் அல்லது டெம்பரா வண்ணங்கள். அல்லது, பல வண்ண பேனா மைகள் கூட போதும்.
செய்முறை :
உங்கள் விரல் நுனியை மையில் தோய்த்து, அந்த மையினை தாளில் அச்சாக பதிக்க வேண்டும், அவ்வளவே.
இம்முறையில் உருவாக்கிய சில ஓவியங்களை பார்க்கலாமா?
குழந்தைகளே, உங்களுக்கு இந்த ஓவியங்கள் பிடித்திருக்கின்றனவா? நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.