அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்து, சிட்டுவுக்காகக் காத்திருந்தனர். சிட்டுவும் சரியான நேரத்துக்கு வர, உடனே டைனோசர் கதை ஆரம்பமானது.  

“முக்கியமான டைனோசர் பத்தியெல்லாம், ஏற்கெனவே ஒங்களுக்குச் சொல்லிட்டேன்” என்று சிட்டு சொல்லி முடிப்பதற்குள்,

“இன்னும் நீ வெளவால் மாதிரி பறக்குமே, அந்தப் பறக்கிற டைனோசர் பத்திச் சொல்லலை சிட்டு” என்று  குறுக்கிட்டாள் மலர். 

“அந்த டெரோசர் (PTEROSAUR) டைனோசர் இல்ல. நிறைய பேர் அது பறக்கிற டைனோசர்னு நினைக்கிறாங்க. அது தப்பு. அது பாம்பு, பல்லி மாதிரி ஊர்வன (reptile) இனத்தைச் சேர்ந்தது  ஊர்வன இனத்தில முதுகெலும்புள்ள (vertebrates) வகையில இதுக்குத் தான், முதன்முதல்ல பறக்குற சக்தி இருந்திருக்கு”. .

207d932a f8a6 43ae a8f7 8f00cd6b7fc1

“அப்படியா?  நாங்களும் அதைப் பறக்கிற டைனோசர்னு தான் நெனைச்சோம்.  நீ தானே டைனோசர் இனத்துலேர்ந்து, பறவை இனம் தோன்றுச்சின்னு சொன்னே?”

“ஆமாம். சொன்னேன்.  இப்ப இருக்குற பறவை இனத்தோட மூதாதையர் டைனோசர் தான்.  அதுல சந்தேகமேயில்ல. ஆனா இந்த டெரோசர் பறவை இனத்தைச் சேர்ந்த்து இல்ல.  இதுக்கும் இப்ப இருக்குற பறவை இனத்துக்கும் சம்பந்தம் இல்ல.  நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, இது முதலை, பாம்பு, பல்லி மாதிரி, ஊர்வன இனத்துல பறக்குற வகையைச் சேர்ந்தது. இதோட இறக்கை தோலாலும், சதையாலும் ஆனது.  ஆனாப் பறவையோட இறக்கை இறகுகளால் (feathers) ஆனது”.      .   

“அது டைனோசர் இல்லேன்னா, டைனோசர் படம் போடறப்ப, இதோட படத்தையும் எப்ப பார்த்தாலும் சேர்த்துப் போடறாங்களே, அது ஏன்?” என்றான் கதிர்/

“ஏன்னா டைனோசர் இருந்த காலத்துல, இதுவும் வாழ்ந்துருக்கு. டைனோசர் மாதிரியே, இதுவும் சுத்தமா அழிஞ்சி போச்சி”.

“இதை எப்படி உச்சரிக்கிறது? ‘பெட்டோசர்’ னா?” என்றான் வினோத். 

“இல்லை வினோத்.  இதுல ‘பி’ சைலண்ட்.. அதை உச்சரிக்காம, ‘’டெரோசர்’ னு உச்சரிக்கணும். டெரோசர்னா, கிரேக்க மொழியில பறக்கும் பல்லின்னு அர்த்தமாம்.. வெலோசிராப்டர், (VELOCIRAPTOR), டெய்னானிக்கஸ் (DEINONYCHUS) அப்படீன்னு ரெண்டு டைனோசர் பத்தி உங்களுக்குச் சொல்லியிருக்கேன். அதோட ஸ்பெஷாலிட்டி, யாருக்காவது ஞாபகம் இருக்கா?”

“அது ரெண்டும் றெக்கை உள்ள டைனோசர். ஆனாப் பறக்க முடியாது”. என்றான் முத்து.    

“நல்லா ஞாபகம் வைச்சிருக்கே முத்து!” என்று பாராட்டியது சிட்டு.

“சிட்டு! எனக்கு இன்னொரு சந்தேகம். டைனோசர் என்ன கலர்ல இருந்துச்சு?” என்றாள் கயல்.

“நல்ல கேள்வி கயல்.  இது பத்தின ஆராய்ச்சி இன்னும் முடிவு பெறலை.  ஏன்னா புதைபடிவத்துல எலும்பு கிடைக்குது,. ஆனா பல கோடி வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த உயிர்களோட தோல் கிடைக்கிறது கஷ்டமில்லியா? நாளாவட்டத்துல தோல், சதையெல்லாம் அழுகி வீணாப் போயிடும். அதனால டைனோசர் கலர் பத்தி நிச்சயமாத் தெரியலை.  பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் என்ன நினைக்கிறாங்கன்னா, பெரிய உருவத்துல இப்ப இருக்குற யானை, காண்டாமிருகம் மாதிரி, டல்லான கலர்ல தான் டைனோசரும் இருந்திருக்கும்னு யூகிக்கிறாங்க.

ஆனா 2010 ல் சீனாவில, சைனோசாராப்டெர்க்ஸ் (Sinosauropteryx) அப்படீன்னு ஒரு சிறகு இருக்குற டைனோசரோட புதைவடிவம் கிடைச்சது.  இந்தச் சிறகுல இருந்த மெலோனோசோம்களை (Melanosomes) எடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துல ஆராய்ச்சி பண்ணினாங்க”. 

“மெலோனோசோம்னா என்ன சிட்டு?” என்றான் பாபு.

“சொல்றேன். நம்ம ஒடம்பு, முடி, கண்ணு இதுக்கெல்லாம் நிறம் கொடுக்கிறது, இந்த மெலோனோசோம்ல இருக்குற மெலனின் (Melanin) தான். அந்த ஆராய்ச்சியில இந்த டைனோசரோட றெக்கை, ஆரஞ்சு நிறத்துல இருந்துச்சின்னு கண்டுபிடிச்சிருக்காங்க. வாலுல பட்டை பட்டையாக் கோடு இருந்துச்சாம். கலர் கண்டுபிடிக்கப்பட்ட முதல் டைனோசர் இது தான்”.

“அப்ப உறுதியாக் கண்டுபிடிக்கிற வரைக்கும், நாம வரையற டைனோசர் ஓவியத்துல நமக்குப் பிடிச்ச மாதிரி பச்சை, ஊதா, மஞ்சள்னு கலர் அடிச்சிக்கலாம்னு சொல்லு” என்றான் கதிர். ”. 

“ஆமாம். உங்க இஷ்டம் தான்”.

“கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன்னாடி செத்துப் போன ஒரு விலங்கு என்ன கலர்ல இருந்துச்சின்னு, இப்ப கண்டுபிடிக்கிறதை நெனைச்சா ஆச்சரியமாயிருக்கு” என்றாள் கயல்.

“எல்லாம் அறிவியல் ஆராய்ச்சியோட மகிமை தான் கயல். அறிவியல் தான் நம்ப முடியாத பல விஷயங்களை இன்னிக்குச் சாத்தியமாக்கியிருக்கு. சரி.   நேரமாயிட்டுது. வரேன்; அடுத்த மாசம் பார்க்கலாம்” என்று டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பியது சிட்டு.

குழந்தைகளும் சிட்டுவுக்கு டாட்டா காட்டிவிட்டு, பிரிய மனமில்லாமல் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.. 

என்ன குழந்தைகளே! உங்களுக்குச் சிட்டு சொன்ன டைனோசர் கதை பிடிச்சிருக்கா? இது பற்றிய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய முகவரி:-

feedback@poonchittu.com

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments