சிலந்திப் பூச்சியைப் பாருங்கள்

வலையை இழையால் பின்னுதே

தேனீக் கூட்டத்தைப் பாருங்கள்

ஒன்றாய்க் கூடி உழைக்குதே

எறும்புக் கூட்டத்தைப் பாருங்கள்

வரிசையில் ஒழுங்காய்ப் போகுதே

மின்மினிப் பூச்சியைப் பாருங்கள்

மின்னல் போலும் ஒளிருதே

வண்ணத்துப் பூச்சியைப் பாருங்கள்

வண்ணம் கண்ணைக் கவருதே

பூமி மனிதனுக்கு மட்டுமல்ல

பூச்சிக்கும் சொந்தமென அறிவோம்

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments