kichu

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியாங் கியாங் தாம்பாளம்
மச்சு மச்சு தாம்பாளம்
மாயா மாயா தாம்பாளம்

ஓடி ஆடிக் களைத்தோம்
ஓரிடத்தில் அமர்வோம்
கூடி விளையாடுவோம்
பாட்டும் கூட பாடுவோம்

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியாங் கியாங் தாம்பாளம்
மச்சு மச்சு தாம்பாளம்
மாயா மாயா தாம்பாளம்

குறுமணலை சலிப்போம்
கரையெனவே குவிப்போம்
சிறு துரும்பை எடுப்போம்
தந்திரமாய் ஒளிப்போம்

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியாங் கியாங் தாம்பாளம்
மச்சு மச்சு தாம்பாளம்
மாயா மாயா தாம்பாளம்

இரண்டு கையும் கோர்ப்போம்
இருக்குமிடம் காட்டுவோம்
கிண்டிக் கிண்டித் தேடுவோம்
கண்டுபிடித்து அசத்துவோம்

கிச்சு கிச்சு தாம்பாளம்
கியாங் கியாங் தாம்பாளம்
மச்சு மச்சு தாம்பாளம்
மாயா மாயா தாம்பாளம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments