வணக்கம் குழந்தைகளே!

கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு உங்களை வரவேற்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊரோட, ஊர் கதையோட உங்களை சந்திச்சிட்டு வருவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்..

இரண்டு வருடமாக கதை கதையாம் பகுதியில் இதுவரைக்கும் ஏகப்பட்ட ஊர்கள் கதைகள் கேட்டாச்சு. சரி இந்த மாதம் என்ன சொல்லலாம்ன்னு தீவிரமாக யோசிச்சிக்கிட்டு இருந்தபோது தான் கல்கி கனவுல வந்து ஒரு யோசனை கொடுத்தார்.கனவுல கல்கி எப்படி வந்தார்ன்னு கேக்கறீங்களா? அது பெரிய கதை. அது இன்னொரு நாளைக்கு சொல்றேன்.

இப்போதைக்கு கதைக்குள்ள போவோமா?

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன அறிவியல் கேள்வி.

அறிவியலா? ஏன் இபப்டி? கதை கேட்க வந்தது ஒரு குத்தமா அப்படின்னு நீங்க கத்துறது எனக்கு இங்க வரைக்கும் கேக்குது. கவலை வேண்டாம். எனக்கும் அறிவியல் வேதியல் எல்லாம் அவ்வளவா ஆகாது தான். இருந்தாலும் நம்ம இன்னைக்கு பார்க்க போற ஊர் தொடர்பாக ஒரு கேள்வி.

நல்ல உச்சி வெயில் அடிக்கும் போது மோட்டார் வாகனத்துலயோ மிதிவண்டியிலயோ போய்க்கிட்டு இருக்கீங்கன்னு வெச்சுக்கோங்க.. அப்போ தூரத்துல தண்ணீர் சாலையில் தேங்கி இருக்க மாதிரி தெரியும்.. கிட்டப்போனா ஒண்ணுமே இருக்காது.. கவனிச்சிருக்கீங்களா? இதை தமிழில் கானல் நீர் அப்படின்னு சொல்வாங்க.. ஆங்கிலத்துல இந்த மாதிரி இருக்கு ஆனா இல்லை .. இல்லை ஆனா இருக்கு வரிசையில் நம்ம தமிழ்நாட்டுல ஒரு இடம் இருக்கு.

அதப்பத்தி தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

சேலம் நாமக்கல் நெடுஞ்சாலையில் பனைமரத்து பட்டி என்ற ஒரு கிராமம் இருக்கு. அந்த கிராமத்துக்கு பக்கத்துல ஒரு சமவெளி..அந்த சமவெளியை தொடர்ந்து மலை போல இரண்டு பாறைகள்.அந்த பாறை இடுக்குகளில் இரு குகைகள்.. குகைகளை கீழே இருந்து பார்த்தா இரண்டு கொம்போடு மான் ஒன்று நிக்கிற மாதிரியே தெரியும்.

அடடா .. ஓடிப்போய் பிடிச்சிறலாம் போலயே அப்படின்னு நினச்சு கிட்ட வந்து பார்த்தா அங்கே மான் இருக்காது. வெறும் வெட்டவெளி தான்.

இப்படி பாக்கிறவங்களை ஆசைகாட்டி மயக்கி தப்பிச்சு “மறையுற” மான் இருக்கும் இடம் கொண்ட ஊரோட பெயர் , பொய்மான் கரடு.

Picture1

படம்: https://tamilnadu-favtourism.blogspot.com/2016/05/poiman-karadu-salem.html

Picture2

ஸ்வாரஸ்யமா இருக்கு இல்ல?

சரி இதுக்கும் கல்கிக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே கேக்கறீங்க?

அமரர் கல்கி பொய்மான் கரடு அப்படிங்கிற பெயரில் ஒரு அருமையான கதையும் எழுதி இருக்கார். 🙂

மான் இருந்து இல்லாம இருந்தா பொய் மான் கரடு .. அப்போ மீன் இருந்து இல்லாம இருந்தா ? என்று கோக்குமாக்காக கேள்வி கேக்குற குட்டீஸ்க்காக  அதுக்கும் நம்ம தமிழ்நாட்டுல  கை வசம் ஒரு ஊரு இருக்கு! அந்த ஊருக்கு பேர் மீமிசல்.

பேரே  வித்தியாசமா இருக்குல்ல?

அறந்தாங்கி பக்கத்துல பாலங்குலம் அருகில் மீமிசல் ஊர் இருக்கு.

மிசை என்றால் தமிழில் மேல் என்றொரு அர்த்தம் இருக்கு.

மலர்மிசை ஏகினான் அப்படின்னு நம்ம வள்ளுவர் கூட சொல்லுவாரே !

அது வெச்சு இந்த ஊர் பேரை பிரிச்சா

மீ + மிச +ல் என்று பொருள் கொள்ளலாம்.  மீன்கள் அதிகமாக வாழும் ஊர் என்பதால் மீன்+மிசை மீமிசல் ஆகி இருக்கலாம் என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நல்ல இருக்குல்ல?

மானையும் பாத்தாச்சு

மீனையும் சாப்பிட்டாச்சு..

அடுத்து என்ன..

கிளம்ப வேண்டியதுதான் 🙂

மீண்டும் அடுத்த மாதம் சந்திக்கலாம் குட்டீஸ்.

அது வரை

உற்சாகமாக இருங்க. கவனமாக விளையாடுங்க.. டாட்டா 🙂 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments