தாத்தா மாட்டிற்காக புற்களை எடுக்க வந்த பொழுது அந்த விலங்குகளைப் பார்த்துவிட்டார். அவர் ஆச்சரியத்தில் எதுவும் செய்யவில்லை.

thatha

“நீங்கள் காட்டு விலங்குகள் தானே, நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? அப்புறம் நீங்கள் எப்படி இவ்வளவு சின்னதா இருக்கீங்க?” என்று கேட்டார்.

“நாங்கள் அபி, சுமியின் சட்டையிலிருந்து வந்திருக்கோம் தாத்தா” என்று இரண்டு முயல்களும் துள்ளிக் கொண்டு கூறின.

“அப்படியா! நீங்க எல்லாரும் ஏன் வித்தியாசமான கலர்ல இருக்கீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டார் அவர்.

அபியும், சுபியும் தூங்கி எழுந்து தாத்தாவிற்கு உதவி செய்யலாம் என்று வந்தார்கள். ஆனால் தாத்தாவும், அந்த விலங்குகளும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

“வாங்க அபி, சுபி” என்று தாத்தா கூப்பிட்டார்.

“தாத்தா நீங்களும் இந்த விலங்குகளுக்கு நண்பர் ஆகிவிட்டீங்களா?” என்று அபி கேட்டாள்.

தாத்தா, “ஆமாம் அபி”

தாத்தாவும், அபி சுபியும் கோழி, மாடு, கன்றுக்குட்டி மற்றும் பக்கத்து வீட்டு நாய்க்கும் சாப்பாடு போட்டுவிட்டு அவைகளுடன் விளையாடினார்கள்.

“தாத்தா இந்த சீக்ரெட்டை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க!” என்று அபியும், சுசியும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அடுத்த நாளே தாத்தா அந்த விஷயத்தைப் பாட்டியிடம் சொல்லிவிட்டார். பாட்டி அதைக்கேட்ட உடனே தோட்டத்தில் வந்து பார்த்தார்.

“உண்மையாவே இங்க அந்த விலங்குகள் இருக்கிறதே, இதை நான் உடனே போய் அபி சுபியோட அம்மா, அப்பாக்கிட்ட சொல்லப் போறேன்” என்று பாட்டி சொன்னார்.

“அம்மா, அப்பாக்கிட்ட சொல்லிடாதீங்க பாட்டி, அவங்க இந்த விலங்குகளை விலங்குகள் காப்பகத்திற்கு அனுப்பிடுவாங்க” என்று சுபி கூறினாள்.

“அதெல்லாம் அனுப்பமாட்டாங்க!” என்று சொன்ன பாட்டி அதை அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டார்.

அம்மாவும், அப்பாவும் வந்து பார்க்கும் பொழுது அங்கே விலங்குகள் இருக்கவில்லை. அதைப் பார்த்து அபியும், சுபியும் அழுதார்கள். அந்த விலங்குகள் எங்கோ மறைந்துவிட்டன. மறுநாள் அவர்கள் ஊருக்குப் போகும் நேரம் வந்துவிட்டது. அவர்களுடன் தாத்தாவும், பாட்டியும் காரில் ஏறி சென்றார்கள்.

வெகுதூரம் பயணம் செய்த பிறகு அபி சுபியின் வீடு வந்துவிட்டது. வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது அந்த விலங்குகள் அபி சுபியின் அறையில் தான் இருந்தன.

“நீங்க எப்படி இங்கே வந்தீங்க?” என்று சுபி கேட்டாள்.

“எங்களுக்கு மேஜிக் தெரியும் நாங்க அது மூலமாத் தான் இங்கே வந்தோம்” என்று யானை சொன்னது.

“உங்களுக்கு மேஜிக்லாம் தெரியுமா? சரி ஊர்ல இருந்து கிளம்பி ஏன் இங்கே வந்தீங்க?” என்று சுபி கேட்டாள்.

—- தொடரும்—-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments