ஆசிரியர் – உன்னிக்கிருஷ்ணன் பய்யாவூர்

மலையாளத்திலிருந்து தமிழில் உதயசங்கர்.

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன், சென்னை – விலை ரூ.15/-

வீட்டுப்பாடம் செய்யாத கோபுவை அடிக்க, ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.  அப்போது நடந்த அதிசயம் என்ன?  கோபு அடி வாங்காமல் தப்பித்தானா? என்பதை அறிந்து கொள்ள, இப்புத்தகத்தை வாங்கி, உங்கள் வீட்டுக் குழந்தைகளை வாசிக்கச் சொல்லுங்கள்.

ஒரு தேநீர் குடிக்கும் செலவுக்கு, இக்குழந்தைகள் புத்தகத்தை வழவழப்புத் தாளில், அழகான படங்களுடன் அச்சிட்டுள்ளார்கள். ஆயிரம் ரூபாய்க்கு மேல் கேக் வாங்கி, குழந்தைகளின் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடும் பெற்றோர், இப்புத்தகத்தை வாங்கி, விழாவில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பரிசளித்து மகிழ்விக்கலாம்.  என்றும் நினைவில் நிற்கக் கூடிய பரிசு இது!   

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நூல் இது.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments