1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வாலறிவன் பிறந்தார். இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். அங்கு தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். முதலில் இவர் இதனை ஒரு பொழுது போக்காக நினைத்து மேற்கொண்டார். ஆனால் தற்போது அது அவரது வாழ்க்கையின் சிறந்த லட்சியமாக மாறியுள்ளது.

ilavenil

2013ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல் முறையாக இவர் வெண்கல பதக்கம் வென்றார். அதன் பிறகு தனது 15வது வயதில் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

2017ஆம் ஆண்டு இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் ககன் நராங்,  துப்பாக்கிச் சுடுதலில் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளை கண்டறிந்து பயிற்சியளிக்க ‘புராஜெக்ட் லீப்’ (Project Leap) என்ற திட்டத்தை ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தில் சேர இளவேனில் வாலறிவேன் தேர்வானார். இதனைத் தொடர்ந்து இவர் ககன் நராங்கிடம் பயிற்சி பெற ஆரம்பித்தார். இந்தப் பயிற்சியால் அதிக பலன் அடைந்த இளவேனில் 2018ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில் பங்கேற்றார். இந்தத் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஷுல் (suhl) பகுதியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இரண்டு முறை ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இவர் சாதித்தார்.

பிரேசிலின் ரீயோடி ஜெனேரீயோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் முதல் முறையாக சீனியர் பிரிவில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதுவரை ஜூனியர் பிரிவில் சாதனைப் படைத்து வந்த இளவேனில் தற்போது சீனியர் பிரிவிலும் கால் பதிக்க ஆரம்பித்து விட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments