வணக்கம் குழந்தைகளே!

இரவு 9 மணி ஆனால் தூங்க சொல்றாங்களா அம்மா?

காலையில் பள்ளி ஆரம்பிக்கும் முன்னாடியே சாப்பிட சொல்றாங்களா?

இரவு ஒழுங்கா தூங்கலேன்னா  மறுநாள் வகுப்புகளை கவனிக்க முடியாம சிரமமா இருக்கா?

முதல் நாள் இரவு சரியா தூங்கலேன்னா மறுநாள் அம்மா அப்பா கோபமாகவே இருக்காங்களா ?

அப்போ நேரத்துக்கு சாப்பிடுறதுக்கும், நேரத்துக்குத் தூங்குறதுக்கும் நம்முடைய குணநலன்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் இருக்கா?

கண்டிப்பா இருக்கு குழந்தைகளே, இத புரிஞ்சிக்க நாம ரெண்டு விஷயங்களை நல்லா புரிஞ்சிக்கணும்.

ஒன்னு உயிரி கடிகாரம், இன்னொன்னு நம்ம உறுப்புகளுக்கும் குணநலன்களுக்கும் உள்ள தொடர்பு.

sleep

கவலையா இருந்தா சாப்பிட முடியலன்னு சொல்லுவாங்க, கேள்விப்பட்டிருக்கிங்களா? அல்லது சரியா சாப்பிடலேன்னா ஒழுங்கா வேலை பார்க்கவோ படிக்கவோ முடியாது.

 இதுல இருந்து என்ன தெரியதுன்னா, நம்ம கவலையும் மன செயல்பாடும் வயிறை சார்ந்திருக்கு.

மேலும் இந்த வயிறு உயிரி கடிகாரம் படி காலையில் 7 மணி முதல் 9 மணி வரை அதனுடைய நேரமாக எடுத்துக் கொண்டு செயல்படும், அதனால இந்த நேரத்துல நாம நல்லா சாப்பிடறது ரொம்ப முக்கியம். அதான் அம்மா நம்மை காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னாடி நல்லா  சாப்பிட சொல்றாங்க. மேலும் நம்ம இந்த நேரத்துல நல்லா சாப்பிட்டுட்டோம்னா  கவலைகளை எளிதில் கையாண்டு விடலாம். சரியா குழந்தைகளே, இனிமேல் சமத்தா காலையில் சாப்பிடறது எவ்வளவு முக்கியம்னு நீங்களும் புரிஞ்சிக்கிட்டு, உங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கும்  சொல்றீங்களா?

சரி காலை எழுந்தவுடன் காலை கடன் முடிக்கிறீங்களா? அது ஏன்னா காலை 5 மணி முதல் 7 மணி வரை நம்ம பெருங்குடலுக்கான நேரம், அதுனால இந்த நேரத்துல நாம காலை கடன் முடிச்சிடணும், அப்படி இல்லனா மல சிக்கல் வந்துடும், அப்படி மல சிக்கல் வந்துட்டா, பெருங்குடலோடு தொடர்புடைய துக்கம் நம்மள தொத்திக்கிடும் , துக்கம் வேண்டாம்னா காலை 5 முதல் 7 மணிக்குள் காலை கடனை முடிப்பது நல்ல பழக்கம். துக்கம் இல்லனா நம்மளோட மன வலிமை அதிகமாகும்.

இப்படி காலையில எழுந்துக்கணும்னா இரவு நம்ம ஒழுங்கா தூங்கணும்ல, இரவு தூங்கலேன்னா  கோபம் வருதுன்னா அப்போ   என்ன உறுப்புல்லாம் இரவுல வேலை செய்யுது?

 நம்ம பித்தப்பையும் கல்லிரலும் இரவுதான் அதிகமா வேலை செய்யுமாம். இரவு 11 முதல் 1 மணி வரை பித்தப்பையும் 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரலும் வேலை செய்யும், இந்த உறுப்புகள் சரியா இருந்தா  நம்ம இயல்புத்தன்மை பாதிக்கப்படாது, இல்லேன்னா அதிகமான கோபத்துக்கு வாய்ப்பிருக்கு.

சாயந்தரம்  நம்ம பள்ளிக் கூடத்துல சிறுநீர் இடைவேளை விடுவாங்கள்ள, அப்போ கண்டிப்பா சிறுநீர் கழிங்க குழந்தைகளே, சாயந்தரம் 3 முதல் 5 மணி வரை நம்ம சிறுநீர் பையும், 5 முதல் 7 வரை சிறுநீரகமும் அதாவது கிட்னியம்  நல்லா வேளை செய்யும் நேரம். இந்த உறுப்புகள் நல்ல இருந்தா நம் அறிவுத்திறன் நல்லா இருக்குமாம். இது பாதிக்கப்பட்டா பயம் வர வாய்ப்பிருக்காம். அதுனால சிறுநீரை அடக்காமல் போக வேண்டியது ரொம்ப முக்கியம் குழந்தைகளே.

அடுத்ததா அதிகாலை 3 மணி  முதல் 5 மணி வரை நம் நுரையீரலுக்கான நேரமாம். இதைதான் பிரம்மமுகூர்த்தம்னு கூட சொல்லுவாங்க, இந்த நேரத்த்தில் மூச்சு பயிற்சி செய்து மன வலிமையை அதிகபடுத்தலாம். சுவாசம் சீராகும். காலை 5 மணிக்கு எழுந்து கூட முயற்சி பண்ணலாம்.

மகிழ்ச்சி, திருப்தி, ஆசை இது எல்லாம் நம் இதயத்தோட தொடர்புடையது, காலை 11 முதல் 1 மணி வரை நம் இதயத்துக்கான நேரம். மத்திய உணவை இந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது.

இன்னும் இதை பற்றி நிறைய தெரிந்துகொள்ள தேடி படியுங்கள், துள்ளலோடு வாழுங்கள் குழந்தைகளே!

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments