குழந்தைகளே, இன்றைக்கு நாம் அழகான பென்குவின் பறவை செய்யலாமா?
தேவையான பொருட்கள் :
- முட்டை ஓடு – முட்டையின் மேல் பகுதியில் சிறிய துளையிட்டு, அதில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின், முட்டை ஓட்டினை, நன்கு நீரில் கழுவி, சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
முட்டை ஓட்டினை, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்தால், முட்டை ஓடு சற்றே உறுதியாகும்.
2. குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் வண்ணக் களிமண் (play doh)
3. கருப்பு நிற அக்ரிலிக் வண்ணம்
செய்முறை:
உங்களது முட்டை ஓட்டினை நன்கு காய வைத்துக் கொள்ளுங்கள். அதில், கருப்பு நிறம் கொண்டு, வண்ணம் தீட்டிக் கொள்ளுங்கள்.
இப்போது வண்ணக் களிமண் கொண்டு, பென்குவினின் தலை, கண், அலகு போன்றவற்றை செய்து கொள்ளவும். இப்போது பென்குவினின் தலையை, முட்டை ஓட்டின் மீது வைக்கவும்.
அழகிய பென்குவின் தயார்.
இந்த அழகிய பென்குவினை செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் குழந்தைகளே.
Wow.. அழகான குட்டி art❤️
மனமார்ந்த நன்றிகள் சகோதரி.