குழந்தைகளே, செய்தித் தாள் வைத்து, அழகிய சுறா மீன் செய்து பார்க்கலாமா?
தேவையான பொருட்கள் :
வெளிர் ஊதா காகிதம் – 1
அடர் ஊதா காகிதம் – 1
செய்தித்தாள்
வெள்ளை நிறக் காகிதம்
கருப்பு நிறக் காகிதம்
செய்முறை:
செய்தித் தாளில், நீள் முக்கோண வடிவம் ஒன்றினை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இது, சுறா மீனின் முகம்.
வெளிர் ஊதா நிற காகிதத்தில், செய்தித்தாளில் வெட்டிய மீனின் முகத்தை ஒட்டிக் கொள்ளுங்கள்.
அடுத்து, கருப்பு நிற காகிதத்தில், அரை வட்டம், உங்கள் செய்தித் தாளில் வெட்டிய மீனின் முகத்திற்கு ஏற்றவாறு வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இது, உங்கள் சுறா மீனின் வாய்ப் பகுதி.
வெள்ளைக் காகிதத்தில், கூர் முனைகள் கொண்ட, சிறு சிறு முக்கோணங்களை வெட்டி எடுத்து, வாய்ப் பகுதியில் (கருப்பு நிற அரைவட்ட காகிதம்) மேலும், கீழும் ஒட்டி விடுங்கள்.
அடுத்து சுறா மீனுக்கு நன்கு பெரிய கண்கள், காகிதத்தில் வரைந்து ஒட்டிக் கொண்டால், நமது சுறா மீன் தயார்.
சுறா மீன் கடலில் இருந்து எட்டிப் பார்ப்பது போல் செய்ய, அடர் ஊதா நிற காகிதத்தில், கடல் அலை போல் வெட்டி ஒட்டிக் கொள்ளுங்கள்.
குறிப்பு:
வண்ணக் காகிதங்கள் இல்லாத பட்சத்தில் வெள்ளைக் காகிதங்களில் வண்ணம் தீட்டி குழந்தைகளை பயன்படுத்தச் செய்யலாம்.
என்ன குழந்தைகளே, செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்களா?
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.