குழந்தைகளே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வண்ணக் காகிதங்கள் கொண்டு அழகிய கிறிஸ்துமஸ் மரம் செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
பச்சை மற்றும் பழுப்பு நிற வண்ணக் காகிதங்கள்
அலங்கரிக்க வண்ண மணிகள்
செய்முறை:
முதலில், உங்கள் பச்சை நிறக் காகிதத்தினை நீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு பெரிய கிறிஸ்துமஸ் மரம் செய்ய வேண்டுமோ, அதற்கேற்றவாறு, பச்சை நிறக் காகிதத்தை நீள் வடிவத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
அடுத்து, அவற்றை நீள அளவின் வாரியாக, அதாவது, கீழே நீளமான துண்டு, அடுத்து, அதைவிட, சற்று சிறியது, இப்படியாக காகிதத் துண்டுகளை வெட்டி ஒட்டிக் கொள்ளுங்கள். அடுத்து, மரத்தின் தண்டிற்கு பழுப்பு நிற காகிதத்தை வெட்டி ஒட்டுங்கள். இப்போது நம் கிறிஸ்துமஸ் மரம் தயார்.
அடுத்து, மரத்தினை அலங்கரிக்க, வண்ண ஸ்டிக்கர்கள், வண்ணப் பொடிகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்ன குழந்தைகளே, இந்தக் கிறிஸ்துமஸை, நாமே செய்த கிறிஸ்துமஸ் மரத்துடன் கொண்டாடலாமா?
பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். தற்சமயம் மணமாகி, கடந்த பத்து ஆண்டுகளாக வசிப்பது அமெரிக்கா. கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு”. பள்ளி நாட்களில் தொடங்கிய கவிதை வாசிக்கும் ஆர்வம், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிரியர்கள், நண்பர்களின் தூண்டுதலோடு வளர்ந்து வருகிறது. வாசிக்க பிடித்திருந்தபடியால், எழுதிப் பார்க்க ஒரு ஆவலுடன் துவங்கிய எழுத்துப் பயணம், இன்று கதை, கவிதை, கட்டுரை என்று தொடர்ந்து வருகிறது.