கா கா என்றது காகம்….
கீ கீ என்றது கிளி….
கீச் கீச் என்றது சிட்டு…
கூ கூ என்றது குயில்…
கொக்கரக்கோ என்றது சேவல்….
கொர் கொர் என்றது தவளை…
உஸ் உஸ் என்றது பாம்பு…
மா மா என்றது மாடு….
மியாவ் மியாவ் என்றது பூனை…
மே மே என்றது ஆடு….
லொள் லொள் என்றது நாய்….
உயிரின ஒலிகள் பலவுண்டு…
பல்லுயிர்க் காத்தால் வாழ்வுண்டு!!!