காடனும் வேடனும்

ஆசிரியர்:- பூவிதழ் உமேஷ்

வெளியீடு:- வாசக சாலை, சென்னை. (9942633833 & 9790443979).

விலை:- ரூ 60/-

https://www.commonfolks.in/books/d/kaadanum-vedanum

லிமோ என்ற வாய் பேசமுடியாத, சிறுவன் குடிசையில் காடன், வேடன் என்ற இரண்டு கிளிகள் வாழ்கின்றன. லிமோ காட்டில் விதையொன்றைக் கண்டு எடுப்பதிலிருந்து கதை துவங்கி, ஆஸ்திரேலியா உட்பட பல இடங்களுக்குப் பயணிக்கிறது.

300 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன டோடோ பறவை, ஒரே இலையுள்ள கேப் துலிப் செடி, 2000 ஆண்டு வரை வாழும் தாவரம் வெல்வெட்சியா, உலகின் மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சி குயின் அலெசாண்டிரா எனச் சிறுவர்கள் இயற்கையைப் பற்றியும், காட்டுயிர் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைச் செய்திகள், இந்நாவலில் ஏராளம் உள்ளன.

உண்மையும், புனைவும் கலந்த இது, எட்டு முதல் 12 வயது வரையிலுமான குழந்தைகளுக்கு ஏற்ற நாவல். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *