வணக்கம் குழந்தைகளே!

தினமும் காலையில சூரியன் உதிக்குது, அப்புறம் சாயந்தரம் மறையுதுன்னு சொல்றோம்ல, உண்மையிலே சூரியன் மறையுமா? மறைந்து எங்கே போகுது? தெரிஞ்சுக்குவோமா…..

சாயந்தரம் ஆன உடனே சூரியன் அமெரிக்கா போயிடுமா? ஆமாம் குழந்தைகளே, நமக்கு நைட் ஆகும் போது அமெரிக்காவுல  காலைலதானே. அப்போ சூரியன் அங்க உதிச்சிருக்கும்ல. சூரியன் அப்போ தினமும் அமெரிக்கா போய்ட்டு வருதா?

இல்ல இல்ல. சூரியன் ஒரு இடத்துலதான் இருக்கும்.

உண்மையிலேயே சூரியன் மறைவதில்லை குழந்தைகளே, சூரியன் அப்படியே தான் இருக்கும். ஆனால் நம்ம வாழுற பூமி தான் தன்னையும் சுத்தி சூரியனையும் சுத்தி வருது. அதுனால நம்ம பூமி சுத்தும்போது, நம்ம இந்தியா சூரியனைப் பார்த்து திரும்பும் போது பகல்.

earth

இப்போ இதப் புரிஞ்சிக்கிறதுக்கு, உங்க முன்னாடி இருக்குற ஒரு பொருளை சூரியனா நினைச்சுக்கோங்க, உங்க முகம் இந்தியா, உங்க முதுகு அமெரிக்கா, முதல்ல உங்க முகம் சூரியனைப் பார்த்து இருக்கும் போது இந்தியா மேல சூரிய வெளிச்சம் படும். இப்போ உங்க முகத்துக்குப் பகல், அதாவது இந்தியாவுக்குப் பகல். அப்படியே ஒரு அரைவட்டம் சுத்தி உங்க முதுகு சூரியன் பக்கம் இருக்குற மாதிரி நில்லுங்க. இப்போ சூரியன் முதுகுல படும். அதாவது அமெரிக்காவுல பகல்.  மறுபடி பூமி தன்னைத் தானே சுத்துற மாதிரி நீங்க உங்களையே சுத்தினிங்கனா இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாத்தி மாத்தி சூரியன் படுவதை பார்க்கலாம். இப்படித்தான் நமக்கு இரவும் பகலும் வருது. சூரியன் மறைவதில்லை. நாம தான் அதாவது நம்ம பூமி தான் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும் பொழுது சூரியனைப் பார்ப்பதும் மறைவதும், அதாவது இரவும் பகலும் வருகிறது.

இப்போ இந்தியாவுல எத்தனை மணி அமெரிக்காவுல எத்தனை மணின்னு வீட்ல பெரியவங்க கிட்ட கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் செல்லங்களே.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments