விதை மலர்கள்

குழந்தைகளே, இன்னைக்கு விதைகள் வைத்து அழகிய மலர்கள் செய்யலாமா.

என்ன மாதிரி விதைகள் பயன்படுத்தி இந்தக் கைவினை செய்யலாம்?

பூசணி விதைகள், தர்பூசணி விதைகள், முலாம்பழ விதைகள், வெள்ளரிப்பழ விதைகள் இவற்றில் எந்த விதைகளை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நான் இன்றைக்குத் தர்பூசணி விதைகளைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

தர்பூசணி, முலாம் பழம் போன்ற பழங்களைச் சாப்பிட்டு விட்டு, அதன் விதைகளைச் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். சேகரித்த விதைகளைத் தண்ணீரில் நன்கு கழுவிக் கொண்டு, பிறகு வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு காய்ந்த விதைகளை, நாம் கைவினை செய்யப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

பழங்களின் விதைகள், இங்கு நான் தர்பூசணி விதைகள் பயன்படுத்தி உள்ளேன்.

வண்ணப் பேனாக்கள்

பசை

செய்முறை:

விதைகளை அழகிய பூக்களைப் போல், பூக்களின் வடிவில், பசை கொண்டு ஒட்டிக் கொள்ளவும். அடுத்து, மலர்களுக்கு, கிளைகள், இலைகள் போன்றவற்றை வரைந்து கொள்ளவும். அழகிய மலர்கள் தயார். விரும்பினால், விதைகளுக்கு பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்ளலாம். இல்லையெனில், விதைகளின் இயற்கையான வண்ணத்தை அப்படியே விட்டு விடலாம். இரண்டுமே அழகாகத் தான் இருக்கும். முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் குழந்தைகளே.

2 Comments

  1. Avatar

    அழகிய மலர்கள். அருமையான படம் குழந்தைகள் செய்ய விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி

    1. Avatar

      உங்களது அன்பான கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *