அனு, “ஹாய் பூஞ்சிட்டூஸ், வாங்க வாங்க ரொம்ப சுலபமான எக்ஸ்ப்ரிமெண்ட் செய்யலாம்”.

“இன்னிக்கு பிண்டு வேடிக்கை பார்க்கட்டும் நம்ம எல்லாரும் சேர்ந்து அந்த எளிமையான சோதனையைச் செய்யலாம்!”, என்று அனு தேவையான பொருட்களை எடுக்கச் சென்றார்.

தேவையான பொருட்கள்:

பால் – ½ கப்

கிண்ணம் – சிறியது ஒன்று

டிஷ் சோப் (பாத்திரம் கழுவும் லிக்விட் சோப்)

காட்டன் பட்ஸ்

ஃபுட் கலரிங் – இரண்டு அல்லது மூன்று நிறங்கள்

மிளகுத் தூள்

செய்முறை:

1. முதலில் கிண்ணத்தில் சிறிதளவு பாலை ஊற்றிக் கொள்ளவும். கிண்ணத்தை அசையாமல் பார்த்துக் கொள்ளவும்.

2. பிறகு ஃபுட் கலரிங்கை ஒரு சொட்டு பாலில் சேர்க்கவும். அடுத்து வேறு நிறத்தை எடுத்து, முன்னே சேர்த்த நிறத்திற்கு சற்றுத் தொலைவில் ஒரு சொட்டு விடவும். இப்படி இரண்டு அல்லது மூன்று நிறங்களை தள்ளித் தள்ளி பாலில் சேர்க்கவும்.

3. அடுத்து காட்டன் பட்ஸின் முனைப் பகுதியை டிஷ் சோப்பில் நனைத்துக் கொள்ளவும்.

4. பின்னர் அந்த காட்டன் பட்ஸால் மெதுவாக ஏதேனும் ஒரு நிறத்தைத் தொடவும். வாவ் பாலில் தோன்றிய ஓவியத்தைப் பார்த்து ரசியுங்கள்.

milk

5. மற்றொரு முறை‌ ஓவியம் வரக் கிண்ணத்தில் உள்ள பாலைக் கொட்டிவிட்டு மறுபடி பால் சேர்த்துச் செய்து பார்க்கவும்.

6. எக்காரணம் கொண்டும்‌ சோதனைக்கு உட்படுத்தும் பாலை அருந்தக் கூடாது.

“பிண்டு, இன்னிக்கு நானே இதுக்கான‌ அறிவியல் விளக்கத்தைச் சொல்லப் போறேன்!” – அனு.

“சூப்பர் அனு, ஐ ஆம் வெயிட்டிங்!”, என்றது பிண்டு.

அறிவியல் உண்மைகள்:

பாலில் நிறைய கொழுப்பு இருக்கும். அதன் மேல் ஃபுட் கலரிங்கை சேர்க்கும் பொழுது நிறங்கள் மிதக்கும். பாலில் உள்ள கொழுப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும். சோப்பை சேர்க்கையில் அந்த இணைப்பு உடைந்து கொழுப்புத் துகள்கள் பிரியும். அதனோடு சேர்ந்து நிறங்களும் பிரியும் பொழுது வண்ண ஓவியங்கள் போல் நம் கண்களுக்குத் தெரியும்.

பிண்டு, “என்ன குழந்தைகளே அனு சொல்லித் தந்த சோதனையை செய்து பார்க்கிறீர்களா?”.

பாலில் மிளகுத் தூளினைத் தூவி,  மிளகு என்னவாகிறது என்று இதே போன்று சோப்பு தோய்த்த பட்ஸினை வைத்து செய்து பாருங்கள்.

மறுபடியும் அடுத்த மாதம் உங்களை பிண்டு ரோபட்டும், அனுவும் சந்திப்பார்கள். பாய் பூஞ்சிட்டூஸ்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *