இந்த மாதம் நாம பாக்க போற பறவை பனங்காடை என்று அழைக்கப்படும் இந்தியன் ரோலர். இதற்கு நீலகண்டப் பறவை அப்படின்னும் ஒரு பேரு உண்டு. இதன் அறிவியல் பெயர் Coracias benghalensis. 

இந்த பறவையை இந்திய துணைக்கண்டத்தின் எல்லா பகுதியிலும் பார்க்கலாம். இது ஒரு வலசை போகாத இருப்பிட பறவை. நகர்ப்புறங்களில் வெளிப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இவற்றை பார்க்கலாம். இந்திய துணை கண்டத்தில் காணப்படும் இன்னொரு பனங்காடை, ஐரோப்பிய பனங்காடை.  இது குளிர் காலத்தில் வலசை வரும் பறவை ஆகும். 

பனங்காடை என்று அழைக்கப்பட்டாலும் அதே சமயத்தில் இதை மின்கம்பங்களில் அமர்ந்து இருப்பதை காணமுடியும். சிறிய முட் செடிகளிலும் புதர்களிலும் அமர்ந்து இரையை கண்டவுடன் பறந்து சென்று தரையில் அமர்ந்து இரையை பிடிக்கும்.  கரையான் பிடித்த உணவு.  பறக்கும் போது உணவை பிடிக்க வானில் வித்தைகள் காட்டும்.

ஒரு பனங்காடை  30 – 35 செ மீ  வரை ஒரு புறாவின் அளவை ஒத்து இருக்கும்.  முகம் மற்றும்  தொண்டை  வெளிர் சிவப்பாகவும், தலை மற்றும் மார்பு பழுப்பு நிறத்திலும்,  உடலின் கீழ் பகுதி நீல நிறத்திலும் இருக்கும்.  இறக்கைகளில் அடர் நீலம் மற்றும் வெளிர் நீலம்,  மாறி மாறி இருக்கும்.    இறக்கைகளில் காணப்படும்  இந்த  நீல நிறமானது,  பறவை பறக்கும் போது அழகாக தெரியும். 

ஆண் பெண் பறவைகள் இடையே பெரிய வித்தியாசம் இல்லை.  பொதுவாக தனியாகவே காணப்படும்.  சில சமயங்களில் இணை பறவையுடன் காணப்படும்.

ப‌ட்டு போன பனை  மரப்பொந்துகளிலும்,  பாறை இடுக்குகளிலும் கூடு கட்டும். மார்ச் முதல் ஜூன் வரை கூடு கட்டி 3 முதல் 5 முட்டைகள் இடும்.  ஆண் பெண் பறவைகள் குஞ்சுகளை பாதுகாப்பாக வளர்க்கும். 

ஒடிசா,  கர்நாடகா , தெலுங்கானா என்று மூன்று மாநிலங்களில்,  மாநில பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள பெருமை பனங்காடைக்கு மட்டுமே உண்டு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments