காகித கப் கொண்டு, அழகிய குட்டி காற்றாலை செய்யலாமா?
தேவையான பொருட்கள்
காகித கப் 1
வண்ண காகிதம் 1
செய்முறை
காகித கப்பிற்கு நீங்கள் விரும்பும் வண்ணத்தை தீட்டிக் கொள்ளுங்கள். அடுத்து, காற்றாடிக்கான இறக்கைகள், இரண்டை, காகிதத்தில் வெட்டிக் கொள்ளுங்கள். அந்த இறக்கைகளை, உங்கள் காகித கப்பில் ஒட்டிக் கொள்ளலாம். உங்கள் காற்றாடி சுற்ற வேண்டுமெனில், இறக்கைகளை பசை கொண்டு ஒட்டாமல், குண்டூசி ஒன்றில் இறக்கைகள் இருக்குமாறு வைத்து, சற்றே, காகித கப்பிற்கும், குண்டூசிக்கும் இடையில் இடைவெளி விட்டு குண்டூசியை குத்தி வைக்க, காற்றாடி சுற்றும்.

செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் குழந்தைகளே.