மாஷாவின் மாயக்கட்டில் – ரஷ்ய நாட்டுக்கதை
ஆசிரியர்:- கலினா லெபெதெவா
தமிழாக்கம்:- கொ.மா.கோ.இளங்கோ
வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை
விலை ₹30/-.
மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை. இரவு முழுதும் தூங்காமல் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது. அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும் அவளைத் தங்களோடு தூங்க அழைக்கின்றன.
மாஷா என்ன முடிவெடுத்தாள்? அன்றிரவு எங்கு தூங்கினாள்?, என்று தெரிந்து கொள்ள, கதையை வாசியுங்கள். கருப்பு, வெள்ளை படங்களோடு கூடிய கதைப் புத்தகம்.