kavithai

சின்னச் சின்னப் பாப்பா!

  செல்லக் குட்டிப் பாப்பா!

எங்க வீட்டு இளவரசி

   இந்த சிங்காரப் பாப்பா!

முத்து முத்தாய்ப் பேசுகிறாள்

  மத்தாப்பாய் ஒளிர்கிறாளே!

கலகலவென சிரிக்கையிலே

  கொள்ளை இன்பம் தருகிறாளே!

தத்தித் தத்தி நடை பயிலும்

    தங்க மான் இவள் தானோ?

கிள்ளை மொழி பேசுகையில்

    கிளியும் கூடத் தோற்று ஓடும்!

வண்ணத் தோகை விரித்தாடும்

    அழகு மயில் இவள் தானோ?

எண்ணங்களில் நிறைந்து நிற்கும்

     சின்னக் குயில் இவள் தானோ?

பட்டாம்பூச்சி போல இவள்

    அங்குமிங்கும் சிறகடிப்பாள்!

தமிழ் போல இனிமையுடன்

     மனதில் ஆட்சி செய்திடுவாள்!

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments