தனலட்சுமி சேகர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.  சிறுவயதிலேயே தந்தையை இழந்தமையால் தாயார் விட்டு வேலை செய்து இவரையும் இவர் தங்கைகளையும் காப்பாற்றி வருகிறார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள பிரிவில், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இவர் முதலாவதாக வந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தேசிய அளவிலான தடகள வீராங்கனை ஹிமா தாஸ் இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது. 

Dhanalakshmi
படம்: அப்புசிவா

தனலட்சுமி 20.21 விநாடிகளில் இந்தத் தூரத்தைக் கடந்து, இந்தியாவின் ‘பெண் உசேன் போல்ட்’ என்றழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை முடியடித்தார். 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா 20.26 விநாடிகளில் இதே தூரத்தைக் கடந்து செய்த சாதனையை, இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே 2021 ஜூலையில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்போட்டிப் பிரிவில் விளையாட இவர் தேர்வு பெற்றார். மாற்று வீராங்கனையாக இவர் இருந்ததால் அப்போட்டியில் இவர் விளையாடவில்லை.

இவருடைய அதிவேகத் திறமையைப் பார்த்து சர்வதேச தடகளவீரரான மணிகண்ட ஆறுமுகம் கோச்சாக இருந்து இவருக்குப் பயிற்சியளித்து வருகிறார். மிகவும் வறுமையான குடும்பச் சூழலிலும் தொடர்ந்து சாதனை படைத்து வரும் தமிழ்மகள் தனலட்சுமி சேகரை வாழ்த்துவோம்!       

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments