ஆறு நதி என்றெல்லாம்
அழகான பெயர் இருக்கும்
நீர் நிறைந்து ஓடும்போது
ஊரெல்லாம் பயன் இருக்கும்
கரையோர நாணல்களும்
தலைநிமிர்ந்து ஆடி நிற்கும்
ஆறு கரை தாண்டாமல்
அணையாகத் தடுத்திருக்கும்
காடு மேடு கழனி எல்லாம்
பச்சைப் பசேல் என்றிருக்கும்
ஆடு மாடு குதிரை மேய
அருகம்புற்கள் வளர்ந்திருக்கும்
செந்நெல்லும் செங்கரும்பும்
செழிப்பாக விளைந்திருக்கும்
பழங்கள் எல்லாம் பழுத்திருக்கும்
பறவைகள் பாடிக் களித்திருக்கும்
அலையில் மீன்கள் துள்ளிவரும்
வளையில் நண்டு ஊர்ந்துவரும்
கொக்கும் வாத்தும் காத்திருக்கும்
கொத்திக்கொண்டு சென்றிருக்கும்
ஊற்றெல்லாம் சுரந்திருக்கும்
உணவும் நீரும் கிடைத்திருக்கும்
மழை வெள்ளம் பெருக்கெடுக்கும்
மக்கள் உள்ளம் மகிழ்ந்திருக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1