
குழந்தைகளே, இன்றைக்கு அழகிய முயல் செய்யலாமா? பஞ்சு போல இருக்கும் வெண்முயலை யாருக்கு தான் பிடிக்காது? நாமும் இன்றைக்கு வெள்ளை முயல் ஒன்றை செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
- வரைவதற்கு காகிதம்
- பஞ்சு
- பசை
செய்முறை:
முயலின் உருவத்தை, பெரியவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது, இணையத்தில் கிடைக்கும் முயலின் கோட்டோவிய உருவப்படம் ஒன்றினை அச்செடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் படத்தில், முயலிற்கு இருக்கும், புசுபுசுவென்ற வெண் முடிகளுக்கு, பஞ்சினை ஒட்டுங்கள். முயலுக்கு, கண் கருப்பு வண்ணப் பேனா கொண்டு, கண் வரைந்து கொள்ளுங்கள். இப்போது, அழகிய முயல், தயார். செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே.