டாலும் ழீயும்
சிறுவர் நாவல்
ஆசிரியர் விழியன்
வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை-18 செல் (+91)8778073949
விலை ரூ 40/-.
கடலில் டால் என்கிற டால்பினும், ழீ என்கிற தங்க மீனும், நெருங்கிய நண்பர்கள். இரண்டும் ஒன்றாகப் பள்ளிக்குச் செல்வதும், திரும்புவதும் வழக்கம்.
ஒருநாள் இரண்டும் கடல் பற்றிய ஒரு வரலாற்று நூலை வாசிக்கின்றன. அந்நூலில் இருந்து கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும், அவற்றின் உணவு முறைகள், மீனவர்களின் வேட்டை ஆகியவை பற்றியும் தெரிந்து கொள்கின்றன. அந்நூலிலிருந்த பழைய காலக் கடல் கோட்டையைப் பற்றிய ஒரு செய்தியை வாசித்தவுடன், அது போன்ற கோட்டை ஒன்றைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்ற ஆசைப்படுகின்றன.
இரண்டும் சேர்ந்து அதற்கான திட்டங்களைத் தீட்டுகின்றன டிகிரோ என்பது ஒரு ஆக்டோபஸ். அது வரைபடம் வரைந்து கொடுக்கின்றது. மூக்காயி என்ற கடல்பசு, கோட்டையைக் கட்டத் துவங்குகிறது. ஆனால் பிச்சு என்ற சுறாவும், விங்கோ என்ற திமிங்கலமும் சேர்ந்து, கோட்டை கட்ட விடாமல் இடைஞ்சல் பண்ணுகின்றன.
தங்க மீன் ழீ ஒரு சிறுவனின் மீன் பிடி வலையில் மாட்டிக் கொள்கிறது. அதிலிருந்து ழீ எப்படி தப்பித்தது? இரண்டும் சேர்ந்து கோட்டையைக் கட்டி முடித்தனவா? என்று தெரிந்து கொள்ள கதையை வாங்கி வாசியுங்கள். விறுவிறுப்பும், சுவாரசியமும் நிறைந்த சிறுவர் நாவல்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.