ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு மலையாம்
ஒரே ஒரு மலையிலே
ஒரே ஒரு மரமாம்
ஒரே ஒரு மரத்திலே
ஒரே ஒரு பழமாம்
ஒரே ஒரு பழத்திலே
அவ்வளவு ருசியாம்
யாருக்கு அது கிடைக்குமுன்னு
ஊருக்குள்ள போட்டியாம்
தட்டிப்பறிச்சு அள்ளிப்போட
நின்னுச்சு ஒரு கூட்டமாம்
சண்டையிட்டா கிடைக்காது
கெடுத்துவிட்டா ஆகாது
தள்ளிவிடக்கூடாது
பகிர்ந்து தின்னா வம்பேது
பாடம் சொல்லுச்சு மரமாம்
ரசிச்சுக் கேட்டக் கூட்டமும்
மனசு மாறி போனதாம்
பகிர்ந்து உண்ண நினைச்சுதாம்
பழமும் தானா விழுந்ததாம்
சனமும் ருசிச்சு தின்னதாம்
ஒண்ணே ஒன்னு இருந்தாலும்
பிரிச்சு கொடுத்து மகிழணும்
நினச்சு பார்த்து வளரணும்
அன்பு மட்டும் விளையணும்
நல்லதே நாளும் தொடரணும்.
What’s your Reaction?
+1
1
+1
2
+1
+1
+1
+1