ஆசிரியர் – ஆதி வள்ளியப்பன்
பூவுலகின் நண்பர்கள், தடாகம், சென்னை-41
விலை ரூ 50/-
இந்நூலில் தமிழகப் பறவைகள், பறவை சரணாலயங்கள் ஆகியவை குறித்த செய்திகள் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும், கடுமையான குளிர்காலத்தில், ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் உணவு தேடி, இந்தியாவுக்கு வலசை வருகின்றன.
பழங்காலத்திலேயே தமிழர்கள் பறவைகளின் பெயர் முதல், வலசை போகும் பண்பு வரை, பல்வேறு அம்சங்களைக் கூர்ந்து நோக்கிப் பதிவு செய்து வைத்திருந்தனர் என்பதற்கு, ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் சத்திமுற்ற புலவரின் “நாராய், நாராய், செங்கால் நாராய்!” என்ற தமிழ்ப் பாடலை மேற்கோள் காட்டுகின்றார்.
இந்நூலில் பறவைகளின் தமிழ்ப்பெயர்களும், நூலின் இறுதியில் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும், கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற, பறவை சரணாலயங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகின்றது. சரணாலயங்கள் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், பறவைகளைப் பாதுகாப்பதில் காட்டும் இயல்பான ஆர்வத்தையும் அக்கறையையும் குறித்து, ஆசிரியர் வியந்து பேசுகிறார்.
தமிழகப் பறவைகளின் பெயர்கள், அவற்றின் இயல்புகள், தோற்றம், சரணாலயங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள, வாசிக்க வேண்டிய புத்தகம். சிறுவர் முதல் பெரியவர் வரை, இயற்கையிலும், பறவை கூர் நோக்கலிலும் ஆர்வம் ஏற்படுத்த, உதவும் புத்தகம்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.