ஒரு ஊர்ல ஒரு சாக்கிலேட்டும் ஐஸ் க்ரீமும் சண்டை போட்டுட்டு இருந்துச்சாம்.

அப்போ ஐஸ் க்ரீம் சொல்லுச்சாம்.. “யாராச்சும் ரொம்ப வெயில்ல கஷ்டப்படும் போது நான் தானே அவங்கள சில்லுன்னு ஆக்குறேன்.. உன்ன விட நான் தான் சிறந்தவன்னு” சொல்லுச்சாம்.

அதைக்கேட்டு சாக்லேட், ‘உன்ன சாப்பிட்டா தான் எல்லாருக்கும் சளி பிடிக்கும் காய்ச்சல் வருமே.. ஆனா என்னை சாப்பிட்டா யாருக்கும் எதுவும் வராதே .. அப்போ நான் தான உன்ன விட சிறந்தவன்..’ ன்னு சிரிச்சிக்கிட்டே சொல்லுச்சாம் சாக்லேட் 

அந்த சமயம் அந்தப்பக்காம போய்க்கிட்டு இருந்த பாகற்காய் , ஐஸ் க்ரீமும் சாக்கிலேட்டும்  சண்டைப்போட்டுக்கிட்டு இருந்ததைக்கேட்டுட்டு ,

‘அடேய் நிறுத்தங்கப்பா.. உங்களை சாப்பிடறதானால எல்லார் வயித்துலயும்  வந்து சேருற புழு பூச்சி எல்லாத்தையும் சரி பண்றதே நான் தான் ! அப்போ நான் தானே உங்க ரெண்டு பேரை விட சிறந்தவன்னு ’ சொல்லுச்சாம்..

இது என்னடா வம்பா போச்சுதுன்னு விஷயத்தை பேசித்தீர்த்துக்க ஊர் நாட்டாமையான வெங்காயம் அங்கே வந்துச்சாம்..

இவங்க  சண்டையை கேட்ட வெங்காயம், ‘அட என்னப்பா இதெல்லாம் ஒரு பிரச்சினையா.. நீங்க மூணு பேருமே சிறந்தவங்க தான்.. எல்லாமே அளவா இருந்தா சிறந்துதானே..

அதனாலே சண்டைப்போடாம இருங்கப்பா..ன்னு சொல்ல..

bitter gourd

பாகற்காய்க்கு  கோவம் வந்து.. “நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.. இவங்க ரெண்டு பேரும் நானும் ஒண்ணா?”ன்னு காட்டமா கேட்டுச்சாம்..

உடனே, வெங்காயம், ‘அட என்னப்பா உனக்குள்ள  இம்புட்டு..கசப்பு..?! உன்ன இந்த சாப்பாட்டு ஊர்ல இருந்து கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கறேன்.. இனி உன்ன  யாராச்சும்  சாப்பாட்டுல சேர்த்துக்கனும்ம்னா  உன் கசப்பை  புளிப்போட்டு கரைச்சுதான் சேர்த்திடுக்கிடணும்..என்ன தீர்ப்பு மாத்திட்டேன்.. சரியா?’ன்னு கேட்டு சிரிச்சுதாம்.    பாகற்காய் சோகமா வந்த வழியே போய்டுச்சாம். அதுக்கப்புறம் சாக்கிலேட்டும் ஐஸ் க்ரீமும் சண்டைப்போடுக்கவே இல்லயாம்!

What’s your Reaction?
+1
2
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments