மொழிபெயர்ப்புச் சிறுகதை
தமிழாக்கம்:- சரவணன் பார்த்தசாரதி
புக்ஸ் ஃபார் சில்ரன் சென்னை-18
விலை 45/-
ரஷ்ய எழுத்தாளர் டட்டியானா மக்கரோவா (Tatiana Makarova) எழுதிய ‘The Brave ant’ என்ற கதையைச் சரவணன் பார்த்தசாரதி, ‘படகோட்டி எறும்பு’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்துள்ளார்.
ஓர் எறும்பு தன் குடும்பத்துடன் புற்றுக்காக இலைகள் சேகரிக்கக் காட்டிற்குச் செல்கின்றது. திரும்பி வந்து பார்த்தால், அங்கிருந்த எறும்பு புற்றையும், அங்கு வசித்த எறும்பு குடும்பங்களையும் காணவில்லை.
வெள்ளம் அப்பகுதியைச் சூழப்போகிறது என்பதையறியாத அந்த எறும்பு, தன் குடும்பத்துடன் அன்றிரவைக் கழிக்க, ஒரு தற்காலிக வீட்டில் தங்குகின்றது.
வீட்டையிழந்த அந்த எறும்பு சந்தித்த சவால்கள் என்னென்ன? அதை எதிர்கொள்ள, அது என்னென்ன சாகசங்களை நிகழ்த்துகிறது? என்பதைச் சொல்லும் கதை. வண்ண ஓவியங்களுடன் கூடிய சிறார் கதை.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.