குட்டியூண்டு முயல்

மொழிபெயர்ப்புக் கதை

ஆசிரியர் கொ.மா.கோ.இளங்கோ

புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18.

விலை ரூ 30/-

பிரபலமான அமெரிக்க குழந்தை எழுத்தாளரான ராபர்ட் க்ராஸ் (Robert Kraus).  எழுதிய ‘The Littlest Rabbit’ என்ற குழந்தை கதையைக் ‘குட்டியூண்டு முயல்’ என்ற தலைப்பில், கொ.மா.கோ.இளங்கோ மொழியாக்கம் செய்துள்ளார்,

ஒரு கேரட் அளவு கூட இல்லாத குட்டி முயலைப் பெரிய முயல்கள் கிண்டல் செய்கின்றன; அடித்துத் துன்புறுத்துகின்றன. விரைவில் பெரிய முயலாகத் தான் வளரவேண்டுமென, அது தினமும் கடவுளை வேண்டுகின்றது. 

ஒரு நாள் அது ஆசைப்பட்டபடியே வளர்ந்து விடுகின்றது. அதற்குப் பிறகு துணிச்சலுடன் அது செய்யும் சாகசங்கள் தாம், கதை. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில்,(Bilingual) கதை சொல்லப்பட்டுள்ளது. கறுப்பு வெள்ளை படங்களுடன் கூடிய, 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *