ஹாய் குட்டீஸ்…
இம்மாதம் கலர் ஆர்ட்டில்….சின்ன tips.
மாடல் ஒண்ணு வரையறதை சொல்லப்போறேன்.
- ஓவியம் வரைவது என்பது, ஒரு நிஜ அல்லது கற்பனை உருவாக இருக்கும். அல்லது கற்பனைகூட செய்யாத உங்கள் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாகவும் இருக்கும்.
- உருவஓவியம் எனில் இரண்டு வகையாக சொல்லலாம்.
மற்றவரின் விருப்பத்திற்கு வரைவது. (ஆர்டர்…டிசைனிங்…விளம்பரஉத்திகள்.. portrait).
தன்விருப்பத்திற்குவரைவரைவது
- தன் விருப்பத்திற்கு வரைய ஒருகாட்சி நம்மை தூண்டவேண்டும். ‘என்னை வரையேன்’ என்று காட்சி நம்மிடம் பேசும்.
ஒரு photography personக்கு இது புரியும். எதை படம்பிடிக்கவேண்டும் என்று அவர்களுக்கு சட்டென்று தோன்றும். அதுபோல நம்மை வரையத்தூண்டிய படமே அழகாக வரும். அதை வரையவரைய அந்த இடத்தில் நாமும் உள்ளே இருப்பதுபோல் feel ஆகும். முதலில் பொறுமை தேவை என்பதுபோலத் தோன்றினாலும்…. ஈடுபட்டுவிட்டால் காலமே போதாது. மிகச்சிறந்த கலைஅனுபவ பொழுதுபோக்கு ஆக இருக்கும்.
4.உதாரணமாக….இந்த தஞ்சாவூர்படம். வரையத்தோன்றியது.
இதை print போட்டு grid வரைந்தேன். மிகநுணுக்கமாக inter grid கூடவரைந்தேன். அதாவது பிரித்தகட்டத்தை இன்னும் உள்அளவில் பிரிப்பது.
7. இதன்பின் பென்சிலின் outline. இது மிகநுணுக்கமாக போட்டுக்கொண்டிருக்க தேவையில்லை. எங்கே என்னவரும் என்பதாக குறிப்பிடும்படி இருந்தால் போதும். ஏனெனில் கலர் என்பது அதன்மேல் இரண்டுமூன்று தடவை வரையவேண்டியிருக்கும்.
8. இப்போது outline முடித்து background color.
நான் தேவையான water color /poster color select.
இந்த படத்திற்கு மஞ்சள்/வெள்ளை/brown/black /orange மட்டுமே தேவைப்பட்டது. சிறிது green.
9. Now…main picture. இதன் பிண்ணனி நிறம் முதலில் கொடுத்தேன்.
10. காய்ந்தவுடன் சிறிது சிறிதாக நுணுக்கமான இடங்களை….மாடல் பார்த்து நிரப்பிக்கொண்டே வந்தேன்.
11. இது கொஞ்சம் வேலை வாங்கும். வேறு வேறு இடங்களை மாற்றி மாற்றி வரையலாம்.
12. ஒரே சமயமாய் முடிக்க முடியவில்லை. ஒரு நாளுக்கு இரண்டு மூன்று மணிநேரம்…
எட்டு நாட்கள்….22hrs
Finish
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.