குழந்தைகளே ! இன்னைக்கு உங்களுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் சாப்பிட்டீங்களா? நல்லா இருந்ததா? சாக்லேட் சாப்பிட்டுட்டு, அதன் உறைகளை பத்திரப்படுத்திக்கோங்க. அந்த சாக்லேட் உறைகளை வைத்து தான், நாம் கைவினைகள் செய்யப் போறோம்.
பட்டாம்பூச்சி எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
சாக்லேட் காகிதத்தை, விசிறி மடிப்பு மடிச்சு, நடுவில் டேப் கொண்டு ஒட்டிக்கோங்க. இது, அடுத்து, ஒரு மெலிதான அட்டையில், பட்டாம்பூச்சியின் உடலை வரைந்து, விசிறி மடிப்பின் நடுவில் வைத்து விட்டால், அழகிய பட்டாம்பூச்சி தயார்.

இதே போல, பறவையின் உடல் வரைந்து கொண்டு, அதன் வாலுக்கு, சாக்லேட் காகிதத்தை, விசிறி மடிப்பு மடித்து ஒட்டலாம். அழகாக இருக்கும்.

செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே.