மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
சரவணன் பார்த்தசாரதி
புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை. 9444960935
விலை ₹45/-
இதில் மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி என இரண்டு கதைகள் உள்ளன முதலாவது பைலோரஷ்ய நாடோடிக்கதை. இரண்டாவது வடசோவியத் கதை. இரினா ஸெலஸ்னோவா ஆங்கிலத்தில் எழுதிய இக்கதைகளைச் சரவணன் பார்த்தசாரதி, தமிழாக்கம் செய்திருக்கிறார்.
மந்திரத்தில் தேர்ச்சி பெற்ற மன்னன் ஒரு அறிவிப்பு செய்கிறான். யார் எங்கே மறைந்திருந்தாலும், தன் ஞானசிருஷ்டியால் கண்டுபிடிக்க முடியுமென்றும், அப்படிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஒளிந்தவன் வெற்றி பெற்றவன் என்றும், அவனுக்கு நாட்டில் பாதி கொடுக்கப்படும் என்றும் மன்னன் சவால் விடுகிறான். ஆனால் மன்னன் ஒளிந்தவனைக் கண்டுபிடித்து விட்டால், அவன் தலை வெட்டப்படும் என்றும், மன்னனின் அறிவிப்பு சொல்கிறது. குறுக்குச்சட்டை கோரா என்பவன், அச்சவாலை ஏற்கிறான். அப்போட்டியில் வென்றவர் யார்? மன்னனா? கோராவா? என்பதை அறிந்து கொள்ள, கதையை வாங்கி வாசியுங்கள்.
இரண்டாவது ‘சிரிக்கும் கரடி’ என்ற கதையில், நரி கரடியை எப்படி ஏமாற்றுகிறது என்று, சொல்லப்படுகின்றது. படங்களுடன் கூடிய சுவாரசியமான சிறுவர் கதைகள்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.