
தாத்தா தாத்தா வந்தாரு
என்ன கொண்டு வந்தாரு
கொய்யாக்கனியும் மாம்பழமும்
கொரிக்க கடிக்க பண்டங்களும்
நிறைய்ய கொண்டு வந்தாரு
ஒரு கையில் பை நிறைய அன்பு கொண்டு வந்தாரு
மறு கையில் அழகான கைத்தடி கொண்டு வந்தாரு
தாத்தா தாத்தா வந்தாரு
என்ன கொண்டு வந்தாரு
பாட்டி குடுத்த அன்பெல்லாம்
பண்டமாக தந்தாரு